இந்தியரே இல்லாதவர் கையில் போலி இந்திய பாஸ்போர்ட்: கோவைக்கு அரேபியா விமானத்தில் வந்த அன்வர் உசேன் கைது!
By : Kathir Webdesk
போலி ஆவணங்களுடன் கோவை வந்த வங்கதேச இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சார்ஜாவில் இருந்து கோவை சர்வதேச விமான நிலையத்துக்கு ஏர் அரேபியா விமானம் வந்தது.
விமானத்தில் இருந்து இறங்கிய பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் உடமைகளை விமான நிலைய அதிகாரிகள் சோதனையிட்டதில், விமானத்தில் ஏறிய ஒருவரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து அந்த நபரின் பாஸ்போர்ட்டை அதிகாரிகள் சோதனை செய்தனர். அவர் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்தவர் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்வர் உசேன் தனியார் நிறுவனத்தில் வேலை பார்ப்பதற்காக ஷார்ஜாவில் இருந்து கோவைக்கு வந்தார். அதிகாரிகளின் கேள்விகளுக்கு அவர் சரியாக பதிலளிக்காததால் சந்தேகம் ஏற்பட்டது. தேசிய கீதத்தைப் பாடச் சொன்னார்கள், ஆனால் அவரால் அதை பாட முடியவில்லை. அப்போது அன்வர் உசேன் போலி ஆவணங்களை பயன்படுத்தியதாக அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டார்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்த அவரிடம் இந்திய பாஸ்போர்ட் மற்றும் ஆதார் எண் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பெங்களூரில் போலி பிறப்புச் சான்றிதழும் பெற்றுள்ளார். இந்த ஆவணங்கள் மூலம், அவர் 2020 இல் இந்திய பாஸ்போர்ட்டைப் பெற்றார்.
பின்னர் அவர் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்குச் சென்றார், அங்கு அவருக்கு மாதம் 30,000 ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டது. அதன் பிறகு மீண்டும் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைக்கு வர முடிவு செய்தார். இதையடுத்து விமான நிலைய அதிகாரிகள் அன்வர் உசேனை கைது கோவை பீளமேடு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
Input From: Dinamalar