ராமசாமி நாயக்கரை பெரியாராக மாற்றியதே பெண்கள் தான் - மகளீர் தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் அமர்களம்!
By : Kathir Webdesk
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, சென்னை எத்திராஜ் கல்லூரியில் நடந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார்.
பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறப்பாக பணியாற்றிய மாவட்ட நிர்வாகங்களுக்கு விருதுகளை வழங்கினார்.
நாமக்கல், நாகை மற்றும் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர்கள் விருதுகளை பெற்று கொண்டனர். தமிழகத்தின், முதல் தீயணைப்பு படை வீராங்கனையையும் கௌரவித்தார்.
தமிழகத்தில் சங்ககாலம் முதல் பெண்கள் போற்றப்பட்டுகின்றனர். மன்னனையே கேள்வி கேட்கும் திறன் கண்ணகிக்கு இருந்தது. இரு மன்னர்களுக்கு இடையே ஏற்பட்ட போரை நிறுத்தக்கூடிய துணிச்சல் அவ்வையாருக்கு இருந்தது.
இடையில் ஏற்பட்ட படையெடுப்பகளால் பெண்கள் முடக்கப்பட்டனர். அதில் இருந்து விடுவிக்க தேவைப்பட்ட இயக்கம் தான் திராவிட இயக்கம். மாநிலத்தின் அனைத்து வளர்ச்சியிலும் பெண்களுக்கு இடம் வழங்கும் வகையில் ஏராளமான திட்டங்கள்கொண்டு வரப்பட்டு உள்ளன.
ராமசாமி நாயக்கருக்கு பெரியார் என்ற பட்டம் கொடுத்ததே பெண்கள் தான் என முதல்வர் ஸ்டாலின் பேசசினார்.
மேலும் பெண்கள் முழுமையாக விடுதலை அடைந்துவிட்டனர் எனக்கூற மாட்டேன். மனரீதியாக, ஆணுக்கு பெண் அடிமை என்ற எண்ணம் ஆண்களின் மனதில் உள்ளது. இதனை மாற்றியாக வேண்டும். பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமும் தமிழகம் தான் என்றார்.