Kathir News
Begin typing your search above and press return to search.

சென்னையில் இலங்கை பாதிரியாரின் பாலியல் வேட்டை - மத்திய அரசுக்கு பறந்த ரிப்போர்ட்!

சென்னையில் இலங்கை பாதிரியாரின் பாலியல் வேட்டை - மத்திய அரசுக்கு பறந்த ரிப்போர்ட்!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  28 April 2023 12:39 AM GMT

சென்னையில் பாதிரியாரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்கள், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

தேவாலயத்திற்கு செல்லும் பெண்களை பாதிரியார் பாலியல் துஷ்பிரயோகம் செய்து துன்புறுத்தினார். பாதிக்கப்பட்ட பெண்ணின் பாட்டி ஒருவர் அளித்த புகாரின் பேரில் கடந்த ஆண்டு அவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட பிறகும் போதகர் தேவாலயத்தை தொடர்ந்து நடத்தி வருவதாகவும், தேவாலயத்தை கட்டுவதற்காக அரசாங்க சொத்துக்களை ஆக்கிரமித்துள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

சமூக ஆர்வலரும், தடை ஓட்டத்தில் தேசிய அளவில் தங்கப் பதக்கம் வென்றவருமான எமி, பாதிரியாரின் தவறுகள் குறித்து ஊடகங்களுக்கு பேட்டியளித்தார்.

இலங்கையைச் சேர்ந்த ஷெராட் மற்றும் அவரது மனைவி ஹெலன் ஆகியோர் சர்வே எண் 233/52 உடன் நிலப் பார்சலில் ஒரு குடியிருப்பு பகுதிக்கு மத்தியில் ஒரு தேவாலயத்தை நடத்தி வருகின்றனர். அவர்கள் நடத்தும் கேட்டரிங் சேவைக்காக நீர்நிலைக்கு அருகில் உள்ள 650 சதுர அடி நிலத்தை ஆக்கிரமித்துள்ளனர். சட்ட விரோதமாக மின் இணைப்புகளை பெற்று வணிக நோக்கத்திற்காக பயன்படுத்துகின்றனர்.

கடந்த ஆண்டு ஷெராட் தேவாலயத்தில் 3 தலித் சிறுமிகளையும் ஒரு முஸ்லீம் சிறுமியையும் பாலியல் ரீதியாக துன்புறுத்தினார். முன்னதாக, தனது மருமகள் மற்றும் 2 பேத்திகளை தன்னிடம் இருந்து பிரித்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக போதகர் மீது மூதாட்டி ஒருவர் போலீசில் புகார் அளித்திருந்தார்.

ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. POCSO குற்றம் சாட்டப்பட்ட இலங்கையைச் சேர்ந்த ஷெராட்டின் இந்தியக் குடியுரிமை ரத்து செய்யப்பட வேண்டும். விசாரணையை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் கோரி எமி மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மனு அனுப்பியுள்ளனர்.

அவர்கள் மற்றொரு மனுவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அனுப்பியதோடு , பாதிரியார் ஷெராட்டின் அரசு சாரா நிறுவனத்திற்கு நிதியுதவி வழங்குவது குறித்தும் பரிசீலிக்கக் கோரியுள்ளனர். அந்த மனுவில், “வெளிநாடுகளில் இருந்து நிதி பெறுவதற்கு வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் (FCRA) படி உரிமம் பெற வேண்டும். ஆனால் ஷெரார்டு மனோகர் அப்படிப்பட்ட உரிமம் எதுவும் பெறாமல் வெளிநாடுகளில் இருந்து பணம் பெற்றுள்ளார். அவர் மீது அமலாக்க இயக்குனரகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி உள்ளனர்.

தேவாலயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய சொத்துக்களுக்கு சீல் வைத்து ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என ஆர்வலர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Input From: Hindu Post

Next Story
கதிர் தொகுப்பு
Trending News