பா.ரஞ்சித் கும்பலின் ஹிந்துவிரோத தன்மை: ராமர், சீதையை அவதூறு செய்து கவிதை!
By : Kathir Webdesk
சென்னை ஆர் கே புரத்தில், வானம் கலைத்திருவிழா என்ற நிகழ்ச்சியில் மலக்குழு மரணம் என்ற தலைப்பில் விடுதலை சிகப்பி என்பவர் கவிதை ஒன்றை வாசித்தார்.
அதில், கடவுள் ராமர், சீதை, லட்சுமணர் மற்றும் ஹனுமனை அவதூறு செய்தும், இழிவுபடுத்தியும் கவிதை வாசித்தார். அதனை அங்கிருந்தவர்கள் விசில் அடித்ததுடன், கைதட்டியதால், விடுதலை சிகப்பி சிரித்து கொண்டே இந்த கவிதையை வாசித்தார்.
இந்த வீடியயோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவ துவங்கியது. இதனை பார்த்த ஹிந்துக்கள் பலர் மத்தியில் கோபம் மற்றும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
அவர் மீது போலீசில் ஹிந்துக்கள் புகார் செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். போலீசாரும், விடுதலை சிகப்பி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.
இது தொடர்பாக இந்து தமிழர் கட்சியின் நிறுவனதலைவர் ராமரவிக்குமார் வெளியிட்ட அறிக்கையில், ஹிந்துக்கள் போற்றி வணங்கும், கடவுள் ராமர், சீதா, லட்சுமணன், ஹனுமன் குறித்து கவிதைஎன்ற பெயரில்,இழிவுபடுத்தி பேசும் நபர் மீது தமிழக அரசு, போலீசார் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.
இதேபோன்று கவிதைவடிவில், கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மதம் குறித்து விமர்சனம் செய்தால், சட்டமும், தமிழக அரசும் இப்படி அமைதியாக இருக்குமா? அனைத்து மதங்களும் மதிக்கப்பட வேண்டும்.
இது போன்ற ஈனபிறவிகள் தண்டிக்கப்பட வேண்டும். பா. ரஞ்சித் கும்பலின் இந்த ஹிந்துவிரோத தன்மையை இந்து தமிழர் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இவ்வாறு கூறியுள்ளார்.
Input from: dinamalar