Kathir News
Begin typing your search above and press return to search.

செருப்பை எடுத்து போலீசை மிரட்டிய திமுக பிரமுகர்: அமைச்சரின் பெயரை சொல்லி அச்சுறுத்தல்!

செருப்பை எடுத்து போலீசை மிரட்டிய திமுக பிரமுகர்: அமைச்சரின் பெயரை சொல்லி அச்சுறுத்தல்!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  9 Jun 2023 8:59 AM IST

ஆலங்குடி அருகே சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த பாரில் மதுபானம் விற்றவரை பிடிக்க போலீசார் சென்றனர். அவர்களை வழி மறித்த திமுக பிரமுகர் போலீசாரை செருப்பால் அடிக்க பாய்ந்ததோடு அமைச்சரின் பெயரை சொல்லி மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வணக்கன்காடு கிராமத்தில் டாஸ்மாக் கடை உள்ளது.

அதன் அருகே உரிய அனுமதி இன்றி செயல்பட்டு வரும் சட்ட விரோத பாரில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.

டி.எஸ்.பி தீபக் தலைமையில் தனிப்படை போலீசார் இருவர் ஆய்வு செய்தனர். அங்கு மதுவிற்ற பரிமளம் என்பவரை பிடித்து இருசக்கர வாகனத்தில் ஏற்றி காவல் நிலையம் அழைத்துச் செல்ல முயன்றனர்.

அப்போது அங்கு வந்த திமுக நிர்வாகியான மதியழகன் என்பவர் தனது ஆதரவாளர்கள் சிலருடன் போலீசாரை வழிமறித்து தனக்கு அமைச்சர் வரை செல்வாக்கு உண்டு எனக் கூறி மிரட்டினார்

போலீசார் கையும் களவுமாக பிடித்து வைத்திருந்த மது வியாபாரி பரிமளத்தை விடுவிக்க முயன்றார். பரிமளம் தப்பிச்சென்று விடாதபடி அவரது சட்டையை போலீசார் கெட்டியாக பிடித்து கொண்டனர்.

தனிப்படை போலீசாரை ஆபாசமாக பேசி செருப்பை எடுத்து அடிக்க பாய்ந்தார் மதியழகன்.

இதனை போலீஸ்காரர் ஒருவர் செல்போனில் படம் பிடித்தார். தான் சிக்கிக் கொண்டதை உணர்ந்த மதியழகன் மது விற்றவரை தாக்குவது போல நடித்தார்.

தனிபடை போலீசார் சிறப்பாக செயல்பட்டு சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட பரிமளத்தை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றனர்.

தனிப்படை காவலர்களை மிரட்டிய மதியழகன், அவரது ஆதரவாளர்கள் மீது புகார் கொடுத்தனர். ஆனால் நடவடிக்கை எடுக்கப் படவில்லை.

Input From: Polimer

Next Story
கதிர் தொகுப்பு
Trending News