Kathir News
Begin typing your search above and press return to search.

சர்ச்சில் பிரார்த்தனைக்கு சென்ற இளம்பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை - கோவில்பட்டியில் மதபோதகர் கைது!

சர்ச்சில் பிரார்த்தனைக்கு சென்ற இளம்பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை - கோவில்பட்டியில் மதபோதகர் கைது!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  21 Jun 2023 3:22 PM IST

வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் வினோத் ஜோஸ்வ. 10 ஆண்டுகளாக தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறை அடுத்த கீழக்கோட்டை சின்னகுளம் பகுதியில் உள்ள ஒரு திருச்சபையில் போதகராக பணியாற்றி வருகிறார்.

மேலும் இவர் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு திருச்சபையில் வைத்து போதனை வகுப்புகளும் நடத்தி வருகிறார். இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் அந்த திருச்சபைக்கு பிரார்த்தனைக்கு சென்று வந்துள்ளார்.

வகுப்பிலும் பங்கேற்றுள்ளார். அப்போது அந்த இளம்பெண்ணுடன் பழகிய போதகர் வினோத் ஜோஸ்வா கடந்த 5 ஆண்டுகளாக பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.

பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் இதனை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக அந்த இளம்பெண்ணை, போதகர் மிரட்டி உள்ளார். இதனால் அவர் யாரிடமும் சொல்லாமல் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு அந்த இளம்பெண்ணுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இருந்த போதிலும் வினோத் ஜோஸ்வா தொடர்ந்து போன் மூலமாக தொந்தவு செய்து வந்ததால் மிகவும் பாதிக்கப்பட்ட இந்த இளம்பெண் தனது குடும்பத்தினரிடம் நடந்தவற்றை கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் இது தொடர்பாக கடம்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் ஆய்வாளர் கோகிலா இதுகுறித்து விசாரணை நடத்தினார்.

விசாரணையில், போதகர் கர்ப்பிணி பெண்ணுக்கு 14 வயதிலிருந்தே பாலியல் தொல்லை அளித்ததாக ஒப்புக்கொண்ட நிலையில், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Input From: Dailythanthi


Next Story
கதிர் தொகுப்பு
Trending News