சிதம்பரம் நடராஜர் கோவில் கையகப் படுத்த துடிக்கிறதா தமிழக அரசு.. இந்து முன்னணி கண்டனம்...
சிதம்பரம் நடராஜர் கோவிலை கையகப்படுத்த துடிக்கும், தமிழக அரசின் செயல்பாட்டை இந்துமுன்னணி வன்மையாக கண்டிக்கிறது.
By : Bharathi Latha
இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்கள அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த அறிக்கையில் சிதம்பரம் நடராஜர் கோவிலை கையகப்படுத்த துடிக்கும், தமிழக அரசின் செயல்பாட்டை இந்துமுன்னணி வன்மையாக கண்டிக்கிறது என்று குறிப்பிட்டு மேலும் பல்வேறு தகவல்களை கூறி இருக்கிறார். அவர் மேலும் கூறுகையில், அனைத்து கோவில்களிலும் திருவிழா காலங்களில் தரிசன நேரங்களில் மாற்றம் ஏற்படுவதும், பக்தர்களின் கூட்டத்திற்கு ஏற்றவாறு தரிசன நிகழ்ச்சிகளை மாற்றியமைப்பதும் வழக்கமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் ஆனி திருமஞ்சன தரிசனத்தை முன்னிட்டு கனக சபையிலிருந்து தரிசனம் செய்வதில் மாற்றம் செய்து கோவில் நிர்வாகம் அறிவிப்பு செய்ததை அரசு நிர்வாகம் தவறாக சித்தரித்ததையும் கோவிலில் அத்துமீறி நுழைந்து குழப்பத்தை ஏற்படுத்திய செயலானது கண்டிக்கத்தக்கதாகும். கோவிலில் பிரச்சனைகள் ஏற்படும் போது, தீக்ஷிதர்கள் சட்ட ரீதியாக எதிர்கொள்ள வேண்டுமே தவிர, கோவிலுக்குள் பலத்தை காட்டுவதும் பக்தர்களை தள்ளிவிடும் செயலானது. வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது போன்ற செயல்களால் கோவிலை புனிதமாக கருதி காப்பாற்றிவந்த தீக்ஷதர் பரம்பரையின் நன்மதிப்பானது கேள்விக் குறியாக்கியுள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோவிலை தீக்ஷிதர்கள் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக நிர்வகித்து வருகிறார்கள். எனவே சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகத்தில் அரசு தலையிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பிறகும் கூட, இந்து சமய அறநிலைத்துறையின் மூலம் சர்ச்சையை ஏற்படுத்துவது கண்டிக்கத்தக்கது என்று இந்து முன்னணி சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
Input & Image courtesy: News