Kathir News
Begin typing your search above and press return to search.

அன்றும், இன்றும் என்ன மாறிவிட்டது? அண்ணாமலை விட்ட டோஸில் அரண்டு போயிருக்கும் அறிவாலயம்!

அன்றும், இன்றும் என்ன மாறிவிட்டது? அண்ணாமலை விட்ட டோஸில் அரண்டு போயிருக்கும் அறிவாலயம்!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  1 July 2023 11:30 AM IST

உச்சநீதிமன்ற கண்காணிப்பில் உள்ள செந்தில் பாலாஜியை முதல்வர் பாதுகாப்பது ஏன்? அவருக்காக முதல்வர் ஸ்டாலின் வரம்பு மீறி செயல்படுகிறார் என குற்றம் சாட்டியுள்ளார் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை.

செந்தில்பாலாஜி விவகாரத்தில், முதல்வர் ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார் என்பதை நினைவுப்படுத்துகிறோம். 2018ல் அப்போதைய எதிர்க்கட்சி தலைவர், ஒரு அமைச்சர் மீது ஊழல் குற்றச்சாட்டு இருப்பதால், அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கவர்னருக்கு கோரிக்கை வைத்தார்.

அன்றும், இன்றும் என்ன மாறிவிட்டது? செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்ட குற்றவாளி என்பதை தி.மு.க.,வின் நாடகம் மாற்றாது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை உச்சநீதிமன்ற கண்காணிப்பில் உள்ள செந்தில் பாலாஜியை முதல்வர் பாதுகாப்பது ஏன்? அவருக்காக முதல்வர் ஸ்டாலின் வரம்பு மீறி செயல்படுகிறார்.

செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்த அறிவிப்பை வாபஸ் பெறுவதாக கவர்னர் கூறவில்லை. உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மேற்கொள்காட்டியுள்ளார்.

கவர்னர் பொத்தாம் பொதுவாக நடிவடிக்கை எடுப்பதாக கூறுகின்றனர். அப்படியெனில், திமுக.,வின் அமைச்சர்கள் எல்லார் மீதும் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். செந்தில் பாலாஜி மீது எங்களுக்கு தனிப்பட்ட விருப்பு வெறுப்பு இல்லை. அவர் செய்த குற்றங்களை தான் பா.ஜ.க எதிர்க்கிறது என கூறினார்.



Next Story
கதிர் தொகுப்பு
Trending News