ஆவின் பால் பாக்கெட் விலை மீண்டும் உயர்வா... புலம்பும் தமிழக நுகர்வோர்கள்...
By : Bharathi Latha
தமிழகத்தில் ஆவின் பால் விற்பனை சற்று மந்தமாக தான் இருந்து வருகிறது. பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் தற்பொழுது மொத்த விற்பனையாளர்கள் சில்லறை விற்பனையாளர்களிடம் அடாவடித்தனமாக நடந்து கொள்கிறார்கள். இதன் காரணமாக சில்லறை விற்பனையாளர்கள் தங்களிடம் இறுதியாக வாங்கும் நுகர்வோரிடம் ஒரு ரூபாய் அதிகமாக ஆவின் பால் பாக்கெட் விலையை விற்பனை செய்வதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதன் காரணமாக ஆவின் பால் பாக்கெட் விற்பனை ஒரு ரூபாய் கூடுதலாக விற்கப்படுகிறது.
ஆவின் வாயிலாக சிவப்பு நிற பால் பாக்கெட் 500 மி.லி., 34 ரூபாய்; ஆரஞ்ச் 30, பச்சை 22, நீலம் 20 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஊதா நிற பசும்பால் பாக்கெட் 22 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சென்னையில் மட்டும் நாள் தூறும் சுமார் 14 லட்சம் லிட்டர் பால் விற்பனை ஆகிறது. மொத்த விற்பனையாளர்களுக்கு பாக்கெட்டிற்கு 1 ரூபாய் குறைத்து, பால் வழங்கப்படுகிறது. வாகன போக்குவரத்து செலவிற்கும் மானியம் வழங்கப்படுகிறது. அது மட்டுமல்ல அதே செய்தமடையும் பால் பாக்கெட் இருக்கு பதிலாக மாற்று பால் பாக்கெட்களும் வாகனத்தில் அதிகமாக அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்த மொத்த விற்பனை காலர்கள் சில்லறை விற்பனையாளர் இடம் விற்கும் பொழுது, 75 காசு குறைத்து கொடுக்க வேண்டும். ஆனால், கடைகளுக்கு முழு விலையில் மொத்த விற்பனையாளர்கள் விற்பனை செய்ய துவங்கியுள்ளனர். இதனால், சில்லறை விற்பனையாளர்கள் ஒரு பாக்கெட்டிற்கு, 1 ரூபாய் கூடுதலாக வைத்து விற்று வருகின்றார்கள். இதன் காரணமாக நுகர்வோர்கள் தற்பொழுது பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
Input & Image courtesy: News