அதிகாரிகளையும் விட்டு வைக்காத அறநிலையத்துறை: கொந்தளிக்கும் செயல் அலுவலர்கள்!
By : Kathir Webdesk
திருக்கோவில் நிர்வாக அதிகாரிகள் சங்கம் ஹிந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளது.
அதில், ஹிந்து சமய அறநிலையத்துறையில் 630 செயல் அலுவலர்கள் பணிபுரிகிறோம்.ஒவ்வொருவரும் முதன்மை கோவிலுடன் கூடிய குழு கோவில்களாக, 25 முதல் 100 கோவில்களை நிர்வாகம் செய்கிறோம்.
சிலருக்கு கூடுதல் பொறுப்பு கோவில்களை நிர்வாகம் செய்ய வேண்டி உள்ளது.எங்களோடு, 25,000க்கும் மேற்பட்ட கோவில் பணியாளர்கள், இரவு பகல் பாராமல் பணியாற்றுகின்றனர்.
தற்போது HRCEமொபைல் செயலியில் இணைய வேண்டும். இல்லையெனில் கடும் நடவடிக்கை பாயும் என அச்சுறுத்தப்படுகிறது.
இது, அனைவரையும் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது.மொபைல் செயலி வழியே எங்களை கண்காணிப்பது, அவமானத்துக்கு உட்படுத்துகிற செயலாகவும், அதிகார துஷ்பிரயோகமாகவும் கருதுகிறோம்.
இது, மனித உரிமை மீறல், தொழிலாளர் விரோத போக்கு, சமூக நீதிக்கு எதிரான செயல்.நாங்கள் பயன்படுத்தும் மொபைல் போன், எங்கள் தனிப்பட்ட உரிமைக்கு உரியது.
இதை நிர்வாகத்திற்காக பயன்படுத்த முடியாது.துறை சார்பில் ஒருங்கிணைந்த மொபைல் எண் மற்றும் மொபைல் போன் வழங்க வேண்டும். அதுவரை மொபைல் செயலியை நடைமுறைப்படுத்துவதை தள்ளி வைக்க வேண்டும் என கூறியுள்ளனர்.
Input From: Dinamalar