துப்பாக்கியால் சுட்டு டி.ஐ.ஜி தற்கொலை... அதிர்ச்சி தரும் பின்னணி தகவல்...
By : Bharathi Latha
காவல்துறை பணி என்றாலே எப்பொழுதும் சமுதாயத்திற்காக சமுதாய பிரச்சனைகளுக்காக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு பணி என்பது அனைவரும் அறிந்ததே. குறிப்பாக காவல்துறையில் இருக்கும் காவல் அதிகாரிகள் பலர் மன அழுத்தத்தில் இருப்பார்கள். பெரும்பாலும் காவலர்களாக தொடக்க நிலையில் இருக்கும் அதிகாரிகள் தான் பெரும்பாலான மன அழுத்தத்திற்கு ஆள அவர்கள் என்று அர்த்தம் கிடையாது உயர் பதவியில் இருக்கும் அதிகாரிகள் கூட மன அழுத்தத்தில் இருக்கிறார்கள் என்று ஆய்வு கூறுகிறது. அந்த வகையில் மன அழுத்தத்தின் காரணமாக கோவை சரக டிஐஜி விஜயகுமார் இன்று காலை 6 மணிக்கு துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த ஒரு செய்தி தான் தற்போது தமிழகத்தின் முக்கிய செய்தியாக மாறி இருக்கிறது. கோவை சரக்கு டிஐஜி விஜயகுமார் காலை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அவர் வழக்கம் போல் காலை 6 மணிக்கு நடைபயிற்சி முடித்து விட்டு முகாம் அலுவலகத்திற்கு வந்தார். பிறகு மெய் பாதுகாவலர் ரவி என்பவரின் துப்பாக்கியை வாங்கி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டு இருக்கிறது.
நேற்றிரவு துணை ஆணையர் குழந்தையின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டார் விஜயகுமார். கடந்த 2 நாட்களாக விஜயகுமார் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த 2 வருடங்களாக தூக்கமின்மைக்காக மாத்திரை பயன்படுத்தியதாகவும் விசாரணையில் தகவல் வெளியாகி இருக்கிறது.
Input & Image courtesy: News