இந்து சமய அறநிலையத்துறையில் சீர்த்திருத்தம் வேண்டும்.. இந்து முன்னணி கோரிக்கை..
By : Bharathi Latha
தமிழகத்தில் உள்ள கோவில்கள் பெரும்பாலானவை இந்து சமய அறநிலையத்துறையின் துறை கட்டுப்பாட்டின் கீழ் தான் இயங்கி வருகிறது. அவ்வாறு கோவில்களில் நிர்வாகத்தை கையாளும் இந்து சமய அறநிலையத்துறை கோவில்களில் வருமானத்திற்கு ஏற்ப அங்கு வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு சம்பளத்தில் வழங்கி வருகிறது. கோவில்களின் அர்ச்சகர்களாக நியமிக்கப்படுபவர்கள் கோவில் நிர்வாக நிதியிலிருந்து பணத்தை அகவிலைப்படி பெற்று வருகிறார்கள்.
குறிப்பாக கோவிலில் வரும் வருமானத்திற்கு ஏற்ப இந்த அகவிலைப்படி வேறுபட்டு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்து முன்னணி சார்பில் ட்விட்டர் பதிவின்போது அவர்கள் குறிப்பிடுகையில், தனது கட்சிக்காரர்களை கோவிலில் தற்காலிக ஊழியர்களாக முதலில் நியமித்து பிறக்க அவர்களை நிரந்தர ஊழியர்களாக ஆக்கி அதிகமான வருமானத்தை கொடுத்து வருகிறார்கள் என்று குற்றம் சாட்டி இருக்கிறார்கள். இது பற்றிய அவர்கள் மேலும் கூறும் பொழுது, "கோவில் வருமானத்திற்கு ஏற்ப அகவிலைப்படி.. யாருடைய நிதியில் இருந்து? தற்காலிக ஊழியர்களாக தனது கட்சிக்காரர்களை நியமித்து அவர்களை நிரந்தரமாக்கி கோவிலில் திணிக்கிறது திராவிட அரசியல்.
கோவில் பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் கூட தரப்படுவதில்லை. அவர்களுக்கு வருவதுபோல அரசு ஊழியர்களுக்கு அள்ளித் தருகிறது. உயர்நீதிமன்றம் கூறியபடி இந்து சமய அறநிலையத்துறையில் சீர்த்திருத்தம் செய்ய வேண்டும். ஒவ்வொரு ஊழியரும் அதிகாரிகளும் இந்து சமய நம்பிக்கைக்கு உறுதிமொழி எடுக்க வேண்டும்" என்று இந்து முன்னணி கோரிக்கை ஒன்றை முன் வைத்து இருக்கிறது.
Input & Image courtesy: News