ஒரே பாடத்திட்டத்தினால் உயர் கல்வியில் ஏற்பட்ட குழப்பம்.. பேராசிரியர்கள் தொடர் எதிர்ப்பு..
By : Bharathi Latha
தமிழகத்தில் தற்போது உயர்கல்வித்துறை சார்பில் இந்த ஆண்டு முதல் அனைத்து பல்கலைக்கழகங்களும் ஒரே மாதிரியான பாடத்திட்டத்தை தயாரித்து அவற்றை நடைமுறைப்படுத்துவதில் தமிழக அரசு உறுதியாக இருந்து வந்தது. அனைத்து அரசு பல்கலைகளுக்கும் ஒரே பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளதால், உயர் கல்வித் துறையில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஒரே பாடத் திட்ட முறைக்கு பேராசிரியர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழகம் முழுவதும் கலை மற்றும் அறிவியல் படிப்புகளை நடத்தும் வகையில் 13 அரசு பல்கலைகள் செயல்படுகின்றன.
இவை அனைத்துக்கும் சேர்த்து, தமிழக உயர் கல்வி மன்றம் வழியே, பொதுவான பாடத்திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது. அதாவது இதற்கு முன்பு வரை அனைத்து பல்கலைக்கழகங்களும் தங்களுக்கு உரிய பாடத்திட்டங்களை தாங்களே வகுத்து அவற்றை நடைமுறை படுத்திக் கொண்டிருந்தது ஆனால் இவற்றை தற்பொழுது நிக்கும் விதமாக புதிய ஒரே பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்த பாடத்திட்டத்தை தான் அனைத்து பல்கலைகளும் பின்பற்ற வேண்டும் என்று உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது.
இதற்கு அனைத்து பல்கலைகள் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்து உள்ளது. குறிப்பாக பல்வேறு தரப்புகளில் இருந்து இதற்கு தொடர்ச்சியான முறையில் எதிர்ப்புகள் தெரிவிப்பது மட்டுமில்லாமல் யூஜிசி நடைமுறைகளை பின்பற்றி தாங்கள் அனந்த பல்கலைக்கழகங்களுக்கு என விதிமுறைகளுடன் பாடத்திட்டங்களை உருவாக்கி இருக்கிறோம் அவற்றுக்கு எதிராக தற்பொழுது ஒரே பாடத்திட்டம் அமைந்திருப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியிருக்கிறார்கள்.
Input & Image courtesy: News