பொது பாடத்திட்டம் கன்ஃபார்ம்.. கலக்கத்தில் தமிழக கல்லூரி மாணவர்கள்..
By : Bharathi Latha
நேற்று சென்னையில் கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர்களுடன் தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பின்னர் அவர் கூறும் போது, "2023-24-ம் கல்வியாண்டில் இருந்தே பொது பாடத்திட்டம் கலை அறிவியல் கல்லூரிகளில் எல்லாம் அறிவிக்கப்பட்டுவிடும். புதிதாக ஏதாவது பாடங்கள் அறிவிக்கப்பட்டிருந்தால், அவற்றுக்கு இந்தாண்டு அதற்கான பாடத்திட்டங்கள் வரையறுக்கப்பட்டு, 2024-25ம் கல்வியாண்டில் இருந்து நிறைவேற்ப்படும்.
அரசு கல்லூரிகள், அரசு உதவிபெறும் கல்லூரிகள், தன்னாட்சி கல்லூரிகள் அனைத்து கல்லூரிகளிலும் இந்தப் பாடத்திட்டங்கள் ஒரே மாதிரியாக பின்பற்றப்படும்" என்று அறிவித்து இருக்கிறார். இதனால், மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இடையில் தற்பொழுது குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது. ஏற்கனவே அனைத்து பல்கலைக்கழகங்களும் ஒரே மாதிரியான புது பாடத்திட்டம் நடைமுறைப்படுத்துவதில் புதிய சிக்கல்களும் சந்தித்து வருகிறது.
இந்த புதிய சிக்கல் மாணவர்களை மட்டும் உள்ளது. ஆசிரியர்களையும் கலக்கத்தில் ஆழ்த்தி இருக்கிறது. தேசிய கல்விக் கொள்கையை 2022 நாங்கள் பின்பற்ற மாட்டோம் எனக் கூறிய தமிழக அரசு தற்பொழுது புதிதாக பொது பாடத்திட்டம் என்று முறையே அமல்படுத்தியது பல்வேறு தரப்பில் இருந்து சர்ச்சைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
Input & Image courtesy: News