ஆவின் பால் பொருட்களின் விலை மீண்டும் உயர்வு.. தொழிலாளர்கள் நலச் சங்கம் கண்டனம்..
By : Bharathi Latha
தமிழ்நாட்டில் மீண்டும் ஆவின் பால் பொருட்களின் விலையை ரூ. 20 முதல் ரூ.100 வரை உயர்த்தி ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்கு தமிழ்நாடு பால் முகவர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலச் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.தமிழக அரசின் பொதுத்துறை கூட்டு நிறுவனமான ஆவின் நிறுவனம் மூலம் தமிழகம் முழுவதும் பால் கொள்முதல் செய்து விற்பனை செய்து வருகிறது. இவர்கள் பால் மட்டும் இன்றி தமிழக அளவில், தயில், மோர், நெய், பன்னீர், வெண்ணெய், பாதாம் பவுடர், ஐஸ் க்ரீம், பால்கோவா உள்ளிட்ட இனிப்பு வகைகளும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
குறிப்பாக விழா காலங்களில் புது ஆவின் இனிப்புகள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக ஏற்கனவே குற்றச்சாட்டு வந்து இருக்கிறது. இந்நிலையில் ஆவின் பால் பொருட்களின் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆவின் பால் பொருட்களின் விலையை ரூ. 20 முதல் ரூ.100 வரை உயர்த்தி நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி பன்னீர் விலை கிலோவுக்கு 100 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால் 450 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 1 கிலோ பன்னீர் 550 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆவின் பாதம் பவுடர் மற்றும் பன்னீர் விற்பனை கிலோ ஒன்றுக்கு நூறு ரூபாயும் வரை உயர்ந்து இருந்தது. தற்போது அவற்றை மீண்டும் உயர்த்தி இருக்கிறார்கள். இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Input & Image courtesy: News