என் மண் என் மக்கள் யாத்திரை.. அண்ணாமலை கேம் ஸ்டார்ட்!
By : Bharathi Latha
தமிழ்நாட்டில் தங்கள் கட்சியை பலப்படுத்தும் விதமாக பாஜக தலைவர் அண்ணாமலை நடைபயணம் மேற்கொள்ள உள்ளார். என் மண், என் மக்கள் என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் மேற்கொள்ள உள்ள இந்த நடைபயணம் மாலை ராமேஸ்வரத்தில் இருந்து தொடங்கி உள்ளார். இதனை உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார். அது மட்டும் கிடையாது பாஜக நடத்தக்கூடிய என் மண் என் மக்கள் என்று யாத்திரையில் பல்வேறு தரப்பு இளைஞர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் பல்வேறு முக்கிய பிரமுகர்களும் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்பது உங்களுக்கே தெரிந்தது. அது மட்டும் கிடையாது அண்ணாமலை அவர்கள் பல்வேறு கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்து இருந்தார். இந்நிகழ்ச்சிக்கு அ.தி.மு.க, பா.ம.க, தே.மு.தி.க உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணியின் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. குறிப்பாக அ.தி.மு.க இந்த நிகழ்ச்சிகளில் நிச்சயம் பங்கேற்காது என்றெல்லாம் பலர் கூறி வந்தார்கள்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க ஓ.பன்னீர்செல்வத்துக்கும் அண்ணாமலை தொலைபேசி வாயிலாக அழைப்பு விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் அதிமுக தரப்பில் இருந்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்பார் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. தேமுதிக சார்பில் அதன் தலைவர் விஜயகாந்த் அவர்கள் தன்னுடைய முழு ஒத்துழைப்பையும் தருவதாக கூறியதோடு மட்டுமில்லாது, இந்த யாத்திரையில் பங்கேற்க மாவட்ட செயலாளர் தேமுதிக சார்பில் கலந்து கொள்வார் என்றும் தெரிவித்து இருந்தார்.
Input & Image courtesy: News