திமுக செய்த பாவத்தை கழிக்க ஸ்டாலின் கட்டாயம் ராமேஸ்வரம் போகணும்: அண்ணாமலை காட்டும் அதிரடி!
By : Kathir Webdesk
அண்ணாமலையின் பாத யாத்திரையை 'பாவ யாத்திரை' என்று சாடிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பதில் அளிக்கும் வகையிலும் ட்விட்டரில் அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.
அதில், திமுக தான் தமிழ் மக்களை வஞ்சித்து பாவங்களைச் சேர்ந்துக்கொண்டிருக்கிறது என்றும் இதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் ராமேஸ்வரம் கடலில் முங்கி சிவனை வழிபட்டு பாவத்தைக் கழிக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.
திமுகதான் கச்சத்தீவை இலங்கைக்கு பரிசாகக் கொடுத்துவிட்டது என்று குறைகூறியுள்ள அண்ணாமலை, 2009இல், இலங்கையில் 1.5 லட்சத்துக்கும் அதிகமான தமிழ் சகோதர, சகோதரிகள் கொல்லப்பட்டனர். அப்போது தனது தந்தையுடன் அவர்களுக்கு உதவுவது போல் நடிப்பதில் மும்முரமாக இருந்தவர் தமிழக முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "தன் குடும்பத்தின் வளர்ச்சிக்காக தமிழ் மக்களை தூண்டிலாகப் பயன்படுத்தி பல பாவங்களைச் சேர்ந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ராமேஸ்வரத்துக்கு பாவ யாத்திரை செய்து, புனித நீராடி, சிவபெருமானிடம் மன்னிப்பு பெறவேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்" என்றும் தெரிவித்துள்ளார்.