மோடியைப் பற்றி ஒரே வரியில் புரிய வைத்த பா.ஜ.கவினர்.. பாராட்டிய அண்ணாமலை..
By : Bharathi Latha
அண்ணாமலை அவர்கள் தற்போது ராமநாதபுரத்தில் சிறப்பாக யாத்திரையை கடந்த மூன்று நாட்களாக மேற்கொண்டு நிறைவு செய்து இருக்கிறார். என் மண் என் மக்கள் என்ற யாத்திரை நான்காவது நாளான நேற்று சிவகங்கை சீமையிலும் சிறப்பாக வரவேற்பும், உற்சாகமும் அளிக்கப்பட்ட யாத்திரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஜூலை 28ஆம் தேதி தொடங்கிய யாத்திரை பயணம் ஆனது தற்போது ஆகஸ்ட் இரண்டாம் தேதி வரை சிறப்பாக மக்கள் மத்தியில் அண்ணாமலை அவர்கள் சென்று நடை பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.
நடைபயணத்தில் மேற்கொள்ளும் போது வரும் வள்ளிகளில் எல்லாம் மக்களை நேரடியாக களத்தில் சந்தித்து மக்கள் குறைகள் என்ன என்பதை கேட்டு அறிந்து கொண்டு வருகிறார். அதன்படி, அண்ணாமலையின் சிவகங்கை பேருந்து நிலையம் முன்பாக திறந்த வேனில் நின்றபடி அண்ணாமலை பேசினார். அப்பொழுது அவர், "நான் வரும் வழியில் நான் ஒரு போஸ்டர் பார்த்தேன் அது எனக்கு மிகவும் பிடித்ததாக இருந்தது அது பற்றி உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன் என்று கூறினார்.
அதாவது மோடி அனைத்து மக்களுக்கும் பிடித்த ஒரு நபர், மோடியை பிடிக்காதவர்கள் யார் என்றால், திருட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு தான் என்று குறிப்பிட்டு இருந்தார். ஒன்பது ஆண்டாக மோடி எந்தவித ஊழலுக்கும் இடம் கொடுக்காமல் ஆட்சி நடத்தி வருகிறார். நாட்டை பிரதானமாக வைத்து அல்லும் பகலும் பிரதமர் மோடி வேலை செய்து கொண்டு இருக்கிறார். அதனால்தான், பொருளாதார வளர்ச்சியில் ஐந்தாவது பெரிய நாடாக இந்தியா வந்துள்ளது. மத்திய அரசின் திட்டம் அனைத்தும் சாமானிய மக்களுக்கு முதன்முதலாக சென்றுள்ளது. அதற்கு காரணம் நாட்டை ஆள்வது சாமானிய மனிதர். சமானிய குடும்பத்தில் பிறந்த ஒரு சாமானிய மனிதர் ஆட்சிக் கட்டிலில் இருப்பதால் சாமானிய மனிதரை பற்றி யோசிக்கக் கூடிய திறன் பிரதமருக்கு உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Input & Image courtesy: News