Kathir News
Begin typing your search above and press return to search.

அண்ணாமலையின் என் மண் என் மக்கள் யாத்திரை.. காங்கிரஸ் சார்பில் தெரிவிக்கப்பட்ட கருத்து..

அண்ணாமலையின் என் மண் என் மக்கள் யாத்திரை.. காங்கிரஸ் சார்பில் தெரிவிக்கப்பட்ட கருத்து..

Bharathi LathaBy : Bharathi Latha

  |  5 Aug 2023 5:44 AM GMT

பாஜக தலைவர் அண்ணாமலை தமிழ்நாட்டில் என் மண் என் மக்கள் என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டுள்ளார். தமிழ்நாடு பாஜக சார்பில் 'என் மண் என் மக்கள் யாத்திரை' யாத்திரை கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெகு விமர்சையாக நடைபெற்றது பாஜகவினர் மட்டும் கிடையாது பொதுமக்களும் இந்த யாத்திரையில் மும்மரமாக கலந்து கொண்டு வருகிறார்கள்.


தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, என் மண் என் மக்கள் யாத்திரையில் அண்ணாமலை அவர்கள் கூறிய கருத்து இருக்கு எதிராக அறிக்கை ஒன்றை விடுத்து இருக்கிறார். அதாவது சமீபத்திய நடை பயணத்தின் போது அண்ணாமலை அவர்கள் தமிழக அரசு ஒவ்வொரு தமிழக குடிமகனின் தலையிலும் சுமார் கோடி கணக்கில் கடனை வாங்கி வைத்திருக்கிறது என்று குறிப்பிட்டு இருந்தார். அவற்றை எதிர்க்கும் விதமாக எஸ்.கே.அழகிரி அறிக்கையில் கூறும் பொழுது, நடைபயணத்தில் அண்ணாமலை பேசும் போது, பல்வேறு ஆதாரமற்ற அவதூறுகளை அள்ளி வீசி வருகிறார். தமிழ்நாடு அரசின் கடனை குஜராத் அரசோடு ஒப்பிடுகிறார். அண்ணாமலையின் முதுகு அவருக்கு தெரியாது. மத்திய பா.ஜ.க. அரசுக்கு 9 ஆண்டுகளில் ரூபாய் 100 லட்சம் கோடி கடன் உயர்ந்திருக்கிறது என்பதை அண்ணாமலை அறிவாரா?


தமிழகத்தில் கடன் யார் ஆட்சியில் எவ்வளவு அதிகரித்தது என்பதை அரைகுறை அண்ணாமலை ஆய்வு செய்யாமல் அவதூறான கருத்துகளை பரப்பலாமா ? 2001 ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சியிலிருந்து வெளியேறும் போது 34,540 கோடி ரூபாயாக இருந்த தமிழகத்தின் கடன் அளவு 2006 ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சிக்காலம் நிறைவடையும் போது 63,848 கோடி ரூபாயாக அதிகரித்திருந்தது. 5 ஆண்டு காலத்திற்குள் கடன் அளவு சுமார் 84 சதவிகிதம் அதிகரித்தது. இதை அண்ணாமலையால் மறுக்க முடியுமா? என்று ஆவேசமாக கருத்தை வெளியிட்டு இருக்கிறார்.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News