செந்தில் பாலாஜிக்கு வழக்கில் திடீர் திருப்பம்.. சிக்கிய முக்கிய ஆவணங்கள்..!
By : Bharathi Latha
செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய முக்கிய இடங்களில் தற்போது சோதனைகள் தீவிரமாக மேற் கொள்ளப்பட்டு வருகிறது. 22 லட்சம் மற்றும் 60 சொத்து ஆவணங்களை அமலாக்க துறையினர் பரிமுதல் செய்து இருக்கிறார்கள். ஏற்கனவே அமலாக்க துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜியை தீவிர விசாரணையில் ஈடுபடுத்தி வந்தார்கள். இந்த நிலையில், அவர்களிடம் முக்கிய ஆதாரம் ஒன்று சிக்கி இருக்கிறது.
வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கின் பெயரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்க துறையினரால் ஜூன் மாதம் கைது செய்யப்பட இருந்தார். ஆனால் திடீரென அவருக்கு ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று கூறி காவலில் இருந்து தப்பிவிட்டார். இன்றைக்கு சூழ்நிலையில் அவர் சரி சிகிச்சைக்கு பிறகு செந்தில் பாலாஜிக்கு தற்பொழுத நீதிமன்ற காவலில் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் கரூர் கோவைகளில் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய ஒன்பது இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள், மத்திய தொழிற்துறை பாதுகாப்பு படையினர் மூன்றாம் தேதி முதல் அதிவேக அதிரடி சோதனையில் ஈடுபட்டு இருக்கிறார்கள். இரவில் செந்தில் பாலாஜியின் உதவியாளர் சங்கரின் வீட்டிலும் அலுவலகங்களிலும் சோதனை மேற்கொண்டு இருக்கிறார்கள் என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
Input & Image courtesy: News