செந்தில் பாலாஜி விசாரணை உச்சகட்டம்.. டெல்லி அழைத்துச் செல்ல முக்கிய முடிவா..
By : Bharathi Latha
சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்க துறையினரால் கைது செய்து இருந்தார்கள். புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த அவரை கடந்த ஐந்து நாட்களாக காவலில் எடுத்து விசாரணையை நடத்த அமலாகt துறையினருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. உச்ச நீதிமன்ற அனுமதியின் பெயரில் தற்போது தீவிரமான விசாரணையை அமலாக்க துறையினர் மேற்கொண்டு வருகிறார்கள்.
அதன் அடிப்படையில் செந்தில் பாலாஜி கடந்த 7ஆம் தேதியில் இருந்து காவலில் எடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவானி உள்ள அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்தில் வைத்து இந்த விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. அது மட்டும் கிடையாது இதுவரை நடந்துள்ளது விசாரணையில் 150 க்கும் மேற்பட்ட ஆவணங்களுக்கு செந்தில் பாலாஜி விளக்கம் அளித்து இருக்கிறார். நேற்றும் ஆவணங்கள் அடிப்படையில் கேள்விகள் கேட்கப்பட்டது.
ஆனால் ஒருபுறம் விசாரணை கிடையே அவர் சற்று ஓய்வெடுக்க அனுமதி வழங்கப்பட்டது. செந்தில் பாலாஜியை விமான நிலையத்தில் டெல்லிக்கு அழைத்து சென்று விசாரணை நடத்த அமலாக்கத்துறை திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால் அந்த தகவல்களுக்கு நேற்று அமலாக்க துறையினர் விளக்கம் கொடுத்து இருக்கிறார்கள். செந்தில் பாலாஜி விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுப்பதன் காரணமாக அவரை டெல்லி அழைத்துச் செல்ல எங்களுக்கு திட்டம் கிடையாது என்று கூறியிருக்கிறார்கள்.
Input & Image courtesy: News