விருதுநகரில் என் மண் என் மக்கள் நடைபயணம்.. மக்கள் கொடுக்கும் அமோக ஆதரவு..
By : Bharathi Latha
பாஜகவை முன்னிலைப்படுத்தும் நோக்கில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் என் மண் என் மக்கள் என்று யாத்திரையை சிறப்பாக மேற் கொண்டு வருகிறார். யாத்திரைக்கு மக்கள் தரும் வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அது மட்டும் கிடையாது, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் மக்களிடம் நேரடியாக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசாங்கம் கடந்த 9 ஆண்டுகளாக மக்களுக்கு செய்த நலத்திட்டங்கள் மற்றும் நன்மைகளை எடுத்துக் கூறும் வகையில் தீவிரமாக பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் அண்ணாமலை அவர்கள் விருதுநகரில் நடை பயணத்தை தொடங்கி இருக்கிறார் விருதுநகரில் மக்கள் அனைவரும் மிகவும் உற்சாகத்துடன் அண்ணாமலை அவர்களின் நடை பயணத்தில் பங்கேற்று இருக்கிறார்கள். குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அரசின் காரணமாக விருதுநகரில் தொடங்கப்பட்ட அரசு மருத்துவமனையின் முன்பு அண்ணாமலை அவர்கள் செல்பி எடுத்துக் கொண்டார். அதன் பிறகு அங்கு இருக்கும் டீ கடையில் டீ அருந்தி டிஜிட்டல் பேமென்ட் மூலமாக பணம் செலுத்தி இருக்கிறார்.
செல்லும் வழிகளில் எல்லாம் மக்கள் சமூகமாக ஆதரவுகளை கொடுத்து வருகிறார்கள். பிரதமர் மோடி அவர்களின் முயற்சியின் காரணமாக பல்வேறு துறைகள் முன்னேற்றம் அடைந்து இருக்கிறது. டீ கடைகளில் கூட தற்போது டிஜிட்டல் பேமென்ட்களை வைத்திருக்கிறார்கள் என்றால் அந்த அளவிற்கு நாடு முன்னேறி இருக்கிறது என்று அர்த்தம் என்றும் அண்ணாமலை அவர்கள் குறிப்பிட்டு பேசி இருக்கிறார்.
Input & Image courtesy: News