Kathir News
Begin typing your search above and press return to search.

ஆலயத்தை சீரழிக்கும் அறநிலையத் துறை.. இந்து முன்னணி பகீர் குற்றச்சாட்டு..

ஆலயத்தை சீரழிக்கும் அறநிலையத் துறை.. இந்து முன்னணி பகீர் குற்றச்சாட்டு..
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  16 Aug 2023 5:47 AM GMT

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் ஒன்றியம் திருப்பட்டூர் கிராமத்தில் அமைந்துள்ள மிகப் பழமையான ஆலயம் அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் ஆலயம். இந்த ஆலயத்தில் ஸ்ரீ பிரம்மாவுக்கு என்று தனி சன்னதி மற்றும் பதஞ்சலி முனிவரின் ஜீவசமாதி அமைந்துள்ளதால் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் இவ்வாலயத்திற்கு வந்து செல்கிறார்கள். இந்த கோவிலில் தான் தற்பொழுது அநீதி நடந்திருப்பதாக இந்து முன்னணி குற்றம் சாட்டி இருக்கிறது. இது தொடர்பாக அவர்கள் எக்ஸ் வலைதளத்தில் குறிப்பிடும் பொழுது, "திருச்சி மாவட்டத்திலேயே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பிரம்மாண்டமான ஆலயம்.



இந்த ஆலயம் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இவ்வாலயத்தின் உள்ளே ராஜகோபுரத்திலிருந்து உள்ளே வரும் வழியில் அமைந்துள்ள கொடிமரத்திற்கு இடது பக்கம் இருக்கின்ற கருங்கல்லால் ஆன தரைப்பகுதியை சீர் செய்கிறோம் என்ற பெயரில் கற்களை பிடுங்கி அந்த இடத்தையே சேதப்படுத்தி உள்ளார்கள். பிரம்மாண்ட கருங்கல் தூண்கள் அமைந்துள்ள அந்தப் பகுதியில் கருங்கற்களை உருவி மீண்டும் அதை இணைப்பதற்கான வழி தெரியாமல் அப்படியே கிடப்பில் போட்டு விட்டார்கள்.


இதனால் அந்தப் பகுதியில் இருக்கும் பிரம்மாண்ட தூண்களுக்கு ஆபத்து ஏற்பட வாய்புள்ளது. இதனால் கோவிலின் உடைய ஸ்திரத்தன்மை சீர்குலையும் நிலை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. பழமையான கோவிலை புணரமைக்கும் போது அதன் தொண்மை வடிவம் மாறாமல் அனுபவம் வாய்ந்தவர்களை வைத்துதான் இந்த வேலைகளை செய்யவேண்டும் என பலமுறை நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. அந்த உத்தரவினை மதிக்காமல் ஏதோ கடமைக்கு செய்து கோவிலை சீர்கெடுத்து விட்டார்கள் என்று இந்துமுன்னணி தரப்பில் குற்றம் சாட்டப்பட்டு இருக்கிறது.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News