அண்ணாமலையின் என் மண் என் மக்கள் யாத்திரை.. பிரமாண்ட பிரதமர் மோடி சிலை..
By : Bharathi Latha
பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை என் மண், என் மக்கள் என்ற நடைப்பயணம் 15 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இந்த நடைபாயணத்தில் அண்ணாமலை அவர்களுக்கு பெருமளவு வரவேற்பு கொடுக்கப்பட்டுள்ளது. அனைத்து தரப்பு மக்களும் இந்த யாத்திரையில் கலந்து கொள்வதன் காரணமாக பாஜக சார்பில் முக்கியமான மற்றும் பிரம்மாண்டமான மோடி சிலை இந்த யாத்திரையில் ஒன்றும் டெம்போ வாகனத்தில் எடுத்துச் செல்லப்படுகிறது. குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடியின் சிலை சுமார் 15 அடி உயரத்தில் மின் மோட்டார் மூலம் இயங்கும் வசதியில் இந்த ஒரு சிலை கச்சிதமாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.
இந்த சிலையில் உள்ள பிரம்மாண்ட வசதி என்னவென்றால் அச்சு அசலாக பிரதமர் நரேந்திர மோடி அவர்களை போன்றே இந்த சிலை எழுந்து நிற்பது போன்று தலையை இரு பக்கம் திருப்பி பார்த்து கையை அசைப்பது போன்று மேலும் அவர் பேசுவது போல வடிவமைப்பு செய்யப்பட்டு இருக்கிறது. இது தமிழகத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் நடத்தும் என் மண் என் மக்கள் என்ற யாத்திரையில் இந்த ஒரு சிலை மிகவும் பிரம்மாண்டமாக கொண்டுவரப்பட்டு இருக்கிறது.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் மேற்கொள்ளும், இந்த யாத்திரையில் முடிவில் தான் அதாவது யாத்திரை நிறுவின்போது தான் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கலந்து கொள்வார். அதற்காக அவர் சென்னை பயணம் மேற்கொள்வார் என்று பாஜக நிர்வாகிகள் தரப்பில் ஏற்கனவே கூறப்பட்டது. ஆனால் அவற்றுக்குள் இன்னும் யாத்திரை தொடங்கிய 20 நாட்களுக்கு முன்னரே பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பிரம்மாண்ட சிலையை பாஜக களம் இறங்கி இருக்கிறது.
Input & Image courtesy: News