வாக்குறுதி கொடுத்துவிட்டு ஏமாற்ற பிரதமர் ஒன்றும் தி.மு.க.காரர் அல்ல... அண்ணாமலை கடும் தாக்கு...
By : Bharathi Latha
பிரதமர் நரேந்திர மோடி விமர்சிக்கும் தகுதி முதல்வர் மற்றும் தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு இல்லை, மேலும் மக்களுக்கு வாக்குறுதி கொடுத்துவிட்டு மக்களை ஏமாற்ற அவர் ஒன்றும் தி.மு.க.காரர் அல்ல என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் கடுமையாக விமர்சனம் செய்து இருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி விமர்சிக்க எந்த ஒரு தகுதியும் திமுகவிற்கு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமர் மோடியை விமர்சிக்கும் தகுதி முதல்வர் ஸ்டாலினுக்கு இல்லை. திமுகவின் குடும்ப கட்சி பயிற்சி பட்டறையில் வழக்கம் போல யாரும் எழுதி கொடுத்த துண்டுச் சீட்டை பார்த்து அதில் என்ன எழுதி இருக்கிறது என்று தெரியாமலேயே கடகடவென்று ஒப்பித்துவிட்டுப் போயிருக்கிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின். துண்டுச் சீட்டில் எழுதியிருப்பது என்னவென்று தெரியாமல் மேடைக்குப் பேச வந்தால், இப்படித்தான் பல ஒப்புதல் வாக்குமூலங்கள் கொடுக்க வேண்டியிருக்கும்.
கடந்த காலத்தின் போது 1964ம் ஆண்டு புயலில் சீர்குலைந்த தனுஷ்கோடி நகரைச் சீரமைக்க, பிரதமர் மோடி தான் முதன்முதலாக முயற்சி எடுக்கிறார் என்பதைத் தெளிவாக ஒப்புக் கொள்கிறார் முதல்வர். 1964க்குப் பிறகு பல முறை மத்திய அரசில் அங்கம் வகித்த திமுக, மருமகனுக்கும், பேரனுக்கும், மகளுக்கும் மத்திய அமைச்சர் பதவியும், எம்.பி பதவியும் வாங்கிக் கொடுப்பதில் மட்டுமே குறியாக இருந்த காரணத்தினால் தமிழக மக்களின் பிரச்சினை குறித்து அவர்கள் எந்த ஒரு அக்கறையை எடுத்துக் கொள்ளவோ அல்லது அது குறித்து பேசவோ நேரம் இல்லை என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொண்ட முதல்வருக்கு என்னுடைய நன்றி" என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
Input & Image courtesy: News