தர்மம் வென்றது.. கோவில் நிலம் மீட்பு.. இந்து முன்னணி போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி..
By : Bharathi Latha
கோவில் நில ஆக்கிரமிப்பு என்பது தற்போது பரவலாக தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. இவற்றிற்கு எதிராக இந்து முன்னணி தொடர்ச்சியான வண்ணம் குரல் கொடுத்து வருகிறது. இந்துக்களுக்கும், இந்து கோவில்களுக்கும் பிரச்சனை என்று வந்தால் முதல் ஆளாக அங்கு வந்து குரல் கொடுத்து ஞாயத்தை பெற்று தருகிறார்கள் இந்து முன்னணி. அந்த வகையில் தற்பொழுதும் இந்து முன்னணியின் போராட்டத்தினால் கோவில் நிலம் மீட்கப்பட்டு இருக்கிறது.
இந்து முன்னணியின் போராட்டத்தால் திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவிலுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த சாக்கடை கால்வாய் மூடப்பட்டது. ஆக்கிரமிப்பை தடுக்க முயற்சித்த அறநிலையத்துறை பெண் அதிகாரியை தாக்கிய திமுக குண்டர்கள் கைது செய்யப்பட்டனர். ஆக்கிரமிக்க முயற்சித்த திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளின் முயற்சி தோல்வியில் முடிந்தது என்று இந்து முன்னணி தன்னுடைய அதிகாரப்பூர்வமான எக்ஸ் அக்கவுண்டில் தெரியப்படுத்தி இருக்கிறது.
இது பற்றி அவர்கள் கூறும் பொழுது, "இந்துமுன்னணியின் போராட்டத்தால் திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவிலுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த சாக்கடை கால்வாய் மூடப்பட்டது. ஆக்கிரமிக்க முயற்சித்த திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளின் முயற்சி தோல்வியில் முடிந்தது. இறுதியில் தர்மம் வென்றது கோவில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு கோயில் நிலம் மீட்கப்பட்டது" என்று கருத்தை சமூக வலைத்தளங்களில் அவர்கள் பதிவிட்டு இருக்கிறார்கள்.
Input & Image courtesy: News