Kathir News
Begin typing your search above and press return to search.

விரோதமாக கல்குவாரி நடத்துபவர்களுக்காக உச்சநீதிமன்றம் கொண்டு வந்துள்ள புதிய உத்தரவு!!

விரோதமாக கல்குவாரி நடத்துபவர்களுக்காக உச்சநீதிமன்றம் கொண்டு வந்துள்ள புதிய உத்தரவு!!
X

G PradeepBy : G Pradeep

  |  21 Nov 2025 1:04 PM IST

புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் பகுதியை சேர்ந்த காசிராஜன், மதுரை உயர்நீதிமன்றத்தில் செய்த மனு தாக்களில், 1700 கல்குவாரிகள் தமிழகத்தில் அரசு உரிமம் பெற்று இருப்பதாகவும், ஆனால் உரிமையாளர்கள் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக கற்களை வெட்டுவதும், அலாவுதியான உரிமத்தை வைத்துக்கொண்டு சட்டவிரோதமாக குவாரிகளில் பல்களை வெட்டி விற்பனை செய்து வருகின்றனர். போல அந்த மாவட்டத்தில் பல இடங்களில் கல்குவாரிகள் சட்டவிரோதமாக நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் போலியான ஆவணங்கள் மூலம் புறம்போக்கு நிலங்களை பட்டா வாங்கியது போல கல்குவாரிகளை நடத்தி வருகின்றனர். இதுபோன்ற சட்டவிரோதமான செயல்களால் அரசுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஆவது மட்டுமல்லாமல் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது. ஏற்கனவே சட்டவிரோதமாக குவாரி நடத்துபவர்கள் மீது அழிக்கப்பட்ட புகார்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்து வருகிறது. விரோதமாக குவாரிகளை நடத்தியவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதமும் இன்னும் வசூலிக்கப்படாமல் இருந்து வருகிறது.

எனவே சட்ட விரோத குவாரிகளை நடத்துபவர்களுக்கு அபராதம் மட்டும் விதிக்கப்படாமல் குற்றவியல் நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தற்பொழுது உத்தரவு பிறப்பிக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி விசாரித்த நீதிபதிகள் குளத்தூரை சேர்ந்த முருகேசன் என்பவர் உரிமம் வழங்கப்படாத நிலத்தில் சுமார் 9000 கன மீட்டர் கனிம வளங்களை சட்ட விரோதமாக வெட்டியதற்கு கடந்த 2023 ஆம் ஆண்டு அவர் மீது ரூ.3.15 கோடி அபராதம் உதிக்கப்பட்ட நிலையில் இன்னும் வசூலிக்க படாத நிலையில் வருவாய் துறை அதனை வசூலிக்க வேண்டி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது போன்ற கனிமத் திருட்டில் ஈடுபடுபவர்களுக்கு அபராதம் விதிப்பதோடு மட்டுமல்லாமல் குற்றவியல் நடவடிக்கை எடுப்பது குறித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இது குறித்து தாக்கல் செய்ய வேண்டி கூறியுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News