Kathir News
Begin typing your search above and press return to search.

திருப்பரங்குன்றம் தீபத்தூண் பூஜை வழக்கு!! நீதிமன்ற உத்தரவு!!

திருப்பரங்குன்றம் தீபத்தூண் பூஜை வழக்கு!! நீதிமன்ற உத்தரவு!!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  3 March 2026 10:49 AM IST

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருக்கும் தீபத்தூணில் பூஜை செய்வதற்கு 5 பேருக்கு அனுமதி வழங்கினால், நீதிமன்ற அவமதிப்பு மனு முடிக்கப்படும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் மார்ச் 4ம் தேதி பதிலளிக்க வேண்டும்.


இவ்வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றாத மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை காவல் ஆணையர், துணை ஆணையர், கோயில் செயல் அலுவலர் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.


மதுரை ஆட்சியர் பிரவீன்குமார் தாக்கல் செய்த பதில் மனுவில், சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கும் நோக்கத்தில் மட்டுமே தடையாணை பிறப்பிக்கப்பட்டது என்றும், நீதிமன்ற உத்தரவை மீறும் எண்ணம் இல்லை என்றும் தெரிவித்தார். நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.


நீதிபதி, நீதிமன்றம் நியமிக்கும் 5 பேர் குழு கோயில் மலை உச்சிக்கு சென்று தீபத்தூண் அருகே 15 நிமிடங்கள் பூஜை செய்ய அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டார். அவ்வாறு அனுமதித்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைப்பதாக தெரிவித்தார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News