Kathir News
Begin typing your search above and press return to search.

கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம்!! முழு ஊதியம் வழங்க வேண்டுகோள்!!

கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம்!! முழு ஊதியம் வழங்க வேண்டுகோள்!!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  5 March 2026 4:21 PM IST

தமிழ்நாடு அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் ஜி. சிவகுமார் வெளியிட்ட அறிக்கையில், சம வேலைக்கு சம ஊதியம், மாதம் ரூ.57,700 வீதம் 12 மாத கால ஊதியம், பெண் கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்.9 முதல் கல்லூரி அளவிலும், சென்னையில் உள்ள கல்லூரி கல்வி ஆணையர் அலுவலகத்தில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடந்தது.


பிறகு 17 நாட்கள் போராட்டம் நடந்ததை அடுத்து, 12 மாத ஊதியம் வழங்கப்படும் என அமைச்சர் வாக்குறுதி அளித்ததால் தற்காலிகமாக போராட்டம் கைவிடப்பட்டு பிப்.26 முதல் பணிக்குத் திரும்பினர்.

போராட்டத்தை தொடர்ந்து கவுரவ விரிவுரையாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் ஊதிய உயர்வு வழங்க முதல்வர் உத்தரவிட்டு அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.


குறைந்த ஊதியத்தில் பணியாற்றும் நிலையில் போராட்டக் காலத்திற்கான ஊதியம் 17 நாட்களுக்கு ரூ.15,179 பிடித்தம் செய்யப்பட்டால் கவுரவ விரிவுரையாளர்கள் மிகுந்த பொருளாதார நெருக்கடி சந்திப்பர்கள்.


எனவே, போராட்ட நாட்களை ஈடு செய்யும் பொருட்டு பிப்.26 முதல் கூடுதலாக 2 முதல் 3 மணி நேரம் வரை பணியாற்றி வருவதால் பிப்ரவரி மாதத்திற்கான முழு ஊதியம் ரூ.25 ஆயிரம் வழங்க தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுப்பதாக கூறியுள்ளனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News