Kathir News
Begin typing your search above and press return to search.

உடன்குடி அனல்மின் நிலையம்!! முக்கிய தகவல்கள்!!

உடன்குடி அனல்மின் நிலையம்!! முக்கிய தகவல்கள்!!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  14 March 2026 2:06 PM IST

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன்குடி அனல்மின் நிலையத்தின் முதல் அலகை திறந்து வைத்தார். இந்த அனல்மின் நிலையம் ரூ.13,077 கோடி செலவில் தலா 660 மெகாவாட் மின் உற்பத்தி திறனுடன் இரண்டு அலகுகளை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.


இந்த நிலையத்தில் முதல் அலகில் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது, இரண்டாவது அலகில் சோதனை ஓட்டம் நடைபெற்று வரும் நிலையில் இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் மின் உற்பத்தியை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இங்கு மேலும் மூன்று அலகுகள் நிறுவிட விரிவாக்கப் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. தற்போது உள்ள இரண்டு அலகுகளுக்கும், இனிவரும் மூன்று அலகுகளுக்கும் நிலக்கரி கொண்டுவர பிரத்தியேக கப்பல்தளமும், மூடிய கன்வேயர் அமைப்பும் கட்டப்பட்டுள்ளது.


இந்த அனல்மின் நிலையம் தமிழகத்தின் மின் தேவையை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News