Kathir News
Begin typing your search above and press return to search.

பிரதமர் மோடி தமிழகத்தில் பாஜக ஆலோசனை கூட்டம்!!

பிரதமர் மோடி தமிழகத்தில் பாஜக ஆலோசனை கூட்டம்!!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  5 April 2026 4:54 PM IST

பிரதமர் மோடி தமிழகத்தில் இரண்டு நாள் பயணம் மேற்கொண்டு, புதுச்சேரி பொதுக்கூட்டத்தை முடித்துவிட்டு சென்னை திரும்பி பாஜக மையக்குழு கூட்டத்தை கூட்டி, 27 தொகுதிகளின் வெற்றி வாய்ப்புகள் மற்றும் தேர்தல் பிரச்சாரம் குறித்து ஆலோசனை நடத்தினார்.


அப்போது இந்தக் கட்சிக்குள் இருக்கும் கருத்து வேற்றுமைகளை அடியோடு மறந்துவிட்டு, வேட்பாளர்களின் வெற்றிக்காக அனைவரும் ஒற்றுமையுடன் பாடுபட வேண்டும் என கூறினார். மத்தியில் மீண்டும் என்டிஏ ஆட்சி அமைய தமிழகத்தின் பங்கு முக்கியம் என நிர்வாகிகளிடம் பிரதமர் மோடி கூறினார்.


மேலும், பாஜகவின் மூத்த தலைவர் ஹெச். ராஜாவுக்கு விரைவில் ஆளுநர் பதவி வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தச் செய்தி கட்சி வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News