Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழக சட்டமன்றத் தேர்தல்!! பா.ஜ.க வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்!!

தமிழக சட்டமன்றத் தேர்தல்!! பா.ஜ.க வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்!!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  8 April 2026 2:52 PM IST

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிகழ்வுகளில் பா.ஜ.க-வின் முக்கிய தலைவர்கள் பங்கேற்று வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

அவினாசி தொகுதியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், சாத்தூரில் பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மயிலாப்பூரில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் ஆகியோர் வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.


கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் வானதி சீனிவாசன், ராஜஸ்தான் முதலமைச்சர் பஜன்லால் சர்மா முன்னிலையில் தனது மனுவைத் தாக்கல் செய்தார். மதுரை தெற்கு தொகுதியில் போட்டியிடும் ராம ஸ்ரீனிவாசன் வேட்புமனுத் தாக்கலின் போது மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் உடனிருந்து ஆதரவு திரட்டினார்.


வேட்புமனுத் தாக்கலை ஒட்டி அந்தந்தத் தொகுதிகளில் பா.ஜ.க தொண்டர்கள் பெரும் திரளாகக் கூடி ஊர்வலமாகச் சென்றது தேர்தல் களத்தை மேலும் பரபரப்பாக்கியுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News