Kathir News
Begin typing your search above and press return to search.

தி.மு.க ஆ.ராசாவின் மூன்றாம் தர பேச்சிற்கு தமிழகம் முழுதும் வலுக்கும் எதிர்ப்பு - கரூரில் திரண்ட பெண்கள் அலை!

தி.மு.க ஆ.ராசாவின் மூன்றாம் தர பேச்சிற்கு தமிழகம் முழுதும் வலுக்கும் எதிர்ப்பு - கரூரில் திரண்ட பெண்கள் அலை!
X

Mohan RajBy : Mohan Raj

  |  28 March 2021 9:00 AM GMT

தமிழக முதல்வர் எடப்பாடி க பழனிசாமி அவர்களின் தாயை இழிவுபடுத்தி பேசிய தி.மு.க துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா அவர்களை கண்டித்து இன்று கரூரில் பெண்கள் ஆயிரக்கணக்கில் கலந்து கொண்ட ஆர்ப்பாடம் நடைபெற்றது.

தி.மு.க துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் தி.மு.க வேட்பாளர் எழிலனை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், கட்சியில் அடிமட்ட தொண்டராக இருந்து உழைத்து முதல்வர் வேட்பாளராக உயர்ந்தவர் மு.க ஸ்டாலின், அவர் முறையாக திருமணம் நடந்த தாய்க்கு முறையாக பிறந்த குழந்தை எனவும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அப்படியல்ல, முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பின்னர் குறுக்கு வழியில் பதவிக்கு வந்தவர். அதாவது கள்ள உறவில் பிறந்த குழந்தை என ஆபாசமாக பேசினார்.

இதனை அ.தி.மு.க கட்சியை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் கண்டித்து வந்தனர். குறிப்பாக பெண்கள் தி.மு.க'வின் இந்த மூன்றாம் தர பேச்சை கண்டித்தனர்.

இதனை தொடர்ந்து இன்று கரூரில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டு தி.மு.க துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா அவர்களின் மூன்றாம் தர பேச்சை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது, "காற்றில் கூட ஊழல் செய்த ராசாவே, உனக்கு முதல்வரை பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது?" என்ற கோஷங்களும் எழுப்பபட்டன.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News