காசு தான் எல்லாமே! கட்சி பிரமுகர்கள் கவனிப்பில் அரசு வேலையில் நுழைந்த ஊழியர்கள், தி.மு.க-விற்கு ஆதரவாக செயல்படும் அவலம்!
By : Muruganandham
அரசு ஊழியர்கள், அரசு பள்ளி ஆசிரியர்கள் ஒரு குறிப்பிட்ட கட்சிகளுக்கு மட்டும் ஆதரவாக செயல்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் தொகுதி தி.மு.க வேட்பாளருக்கு ஆதரவாக செயல்பட்ட, அதே பகுதியில் வசிக்கும் திருப்புலிவனம் ஊராட்சி செயலாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக சார்பில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் க.சுந்தர் போட்டியிடுகிறார்.
இவருக்கு ஆதரவு தெரிவித்து உத்தரமேரூர் தொகுதிக்கு உட்பட்ட திருப்புலிவனம் ஊராட்சி செயலாளர் சுபாஷ், அக்கிராம மக்களுடன் சென்று சால்வை அணிவித்து தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் சமூக வலைத்தளங்களில், இந்த விடியோ காட்சி வைரலாக பரவியதையடுத்து காஞ்சிபுரம் கோட்டாட்சியர் உத்தரவின் பேரில் உத்தரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கி.முத்துக்குமார் சுபாஷை பணியிடை நீக்கம் செய்துள்ளார்.
ஏற்கனவே திங்கள்கிழமை இதே திமுக வேட்பாளர் க.சுந்தருக்கு ஆதரவு தெரிவித்ததாக உத்தரமேரூர் ஊராட்சிக்கு உள்பட்ட சாலவாக்கம் ஊராட்சி செயலாளர் வெ.சதீஷை பணியிடை நீக்கம் செய்திருந்த நிலையில் இரண்டாவதாக சுபாஷ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இருவரும் திமுக வேட்பாளரான மாவட்டச் செயலாளர் க.சுந்தருக்கு ஆதரவாக செயல்பட்ட குற்றத்திற்காக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.