இளம்பெண்களைக் கட்டியணைத்து முத்தமிட்டு வாக்கு சேகரித்த தி.மு.க வேட்பாளர்! ஆத்திரத்தில் கவுண்டம்பாளையம் தொகுதி மக்கள்!
By : Muruganandham
இளம்பெண்களைக் கட்டியணைத்து முத்தமிட்டு அநாகரீகமாக வாக்கு சேகரித்துள்ளார் கவுண்டம்பாளையம் தொகுதி திமுக வேட்பாளர்.
செல்லுமிடமெல்லாம் 'ஆபாச பேச்சு, கட்டப்பஞ்சாயத்து, மின்சார திருட்டு' என அட்டகாசம் செய்து கொண்டிருக்கும் திமுக வேட்பாளர்களுக்கு மத்தியில், கவுண்டம்பாளையம் தொகுதி வேட்பாளரான பையா கவுண்டர் ஒரு படி மேலே சென்றுவிட்டார் என்றால் மிகையாகாது.
பையா கவுண்டர் கோவை கவுண்டம்பாளையம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று வீதி வீதியாக நடந்து சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு கொடுத்தனர். தொடர்ந்து ஒரு வீட்டில் இருந்த முதல் வாக்காளரான கல்லூரி மாணவி ஒருவரை பார்த்து யாருக்கு வாக்களிப்பாய் எனக் கேட்டார். அப்போது செய்வதறியாது திகைத்த அந்த மாணவி உங்களுக்கு தான் ஐயா என்று கூறினார்.
இதனை தொடர்ந்து யாரும் சற்றும் எதிர்பாராத விதமாக அந்த வேட்பாளர் மாணவியின் கையை பிடித்து முத்தமிட்டார். இதனால் அப்பகுதி மக்கள் உட்பட திமுக தொண்டர்களும் அதிர்ச்சியடைந்தனர்.
இளம் பெண்கள் கட்டியனைத்து வாக்கு சேகரிப்பது, கைகளில் முத்தமிடுவது போன்ற செயல்களில் இவர் ஈடுபட்டு வருவதால் கவுண்டம்பாளையம் தொகுதி மக்கள் பையா கவுண்டர் மீது அதிருப்தியடைந்துள்ளனர்.