சகாயத்திற்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை! கொரோனா தொற்று தாக்கம் அதிகரிப்பு!
By : Muruganandham
முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கரோனா அறிகுறி கண்டறியப்பட்டதையடுத்து சென்னை ராஜிவ் காந்தி பொது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம், சகாயம் அரசியல் பேரவை என்ற அமைப்பு தொடங்கி, நடந்துமுடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிட்டார். சகாயம் அரசியல் பேரவையின் வேட்பாளர்களுக்காக அவர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த நிலையிலேயே கொரோனா பாதிப்பு உறுதியானது.
இந்த நிலையில், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்த சகாயத்துக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டதால் அவர் தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. பல முக்கிய அரசியல் பிரமுகர்களும் கொரோனா தாக்கத்திற்கு ஆளாகி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.