முதல்வர் ஸ்டாலினுக்கு "நோ" சொன்ன அ.தி.மு.க! தலைமை செயலாளரிடம் பத்திரமாக வழங்கப்பட்ட ரூ 1 கோடி!

By : Muruganandham
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பை தடுக்கும் நடவடிக்கைக்கும், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கவும் நிதி தேவைப்படுவதால், மக்களை நிதியுதவி அளிக்குபடி முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதனை ஏற்று தொழிலதிபர்கள், சினிமா நட்சத்திரங்கள், அரசியல் பிரமுகர்கள் முதல் சாதாரன மக்கள் வரை அனைவரும் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகாக நிதியுதவி அளித்து வருகின்றனர்.
அந்த வகையில் அதிமுக சார்பில் ஒரு கோடி நன்கொடையை, முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக செய்தித்தொடர்பாளர் ஜேசிடி பிரபாகர், செயலாளர் பாலகங்கா, ஆகியோர் தமிழக தலைமைச்செயலாளர் இறையன்புவை சந்தித்து வழங்கினர். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வெளியானது.
தற்போது தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என அனைவரும் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து நிதி அளித்து வரும் நிலையில், அமைச்சர் ஜெயக்குமார் தலைமை செயலாளரிடம் நிதி வழங்கியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், தமிழக அரசு எடுக்கும் எந்த முடிவுக்கும் அதிமுக முழு ஒத்துழைப்பு வழங்கும் என்றும், மக்களுக்கு பாதிப்பு என்றால் அதிமுக குரல் கொடுக்கும் என்றும் கூறினார்.
மேலும் கடந்த கால திமுக ஆட்சியில், விமர்சனங்கள் அதிகம் இருந்த சூழ்நிலையில், மக்கள் பாராட்டும்படியாகவும், அகில இந்திய அளவில் பாராட்டும்படியாகவும், முதல்வராக இருந்து எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் திறம்பட செயல்பட்டார்கள். அது தமிழ்நாட்டு மக்களுக்கே தெரியும்.
எனவே மலிவான விளம்பரம் தேடும் வகையில் திமுகவை போல அரசை விமர்சிக்க வேண்டும் என்ற எண்ணம் கிடையாது. ஒரு ஆக்கப்பூர்வமான எதிர்கட்சி என்ற முறையில் கொரோனா குறித்து அரசின் நடவடிகைகைக்கு அதிமுக ஒத்துழைப்பு கொடுக்கும். ஆனால் மக்களுக்கு பாதிப்பு என்றால் அதனை எதிர்த்து அதிமுக குரல் கொடுக்கும் என தெரிவித்துள்ளார்.
