Kathir News
Begin typing your search above and press return to search.

உலகின் நம்பர்-1 செஸ் வீரரை வீழ்த்திய சிறுவன் பிரக்ஞானந்தாவுடன் பா.ஜ.க செய்தித்தொடர்பாளர் SG சூர்யா சந்திப்பு!

உலகின் நம்பர்-1 செஸ் வீரரை வீழ்த்திய சிறுவன் பிரக்ஞானந்தாவுடன் பா.ஜ.க செய்தித்தொடர்பாளர் SG சூர்யா சந்திப்பு!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  25 March 2022 12:54 PM GMT

2018ஆம் ஆண்டு ஜீன் மாதம் இத்தாலியில் நடைபெற்ற Gredine Open சர்வதேச செஸ் போட்டியின் எட்டாவது சுற்றில் வெற்றி பெற்றதன் மூலம், கிராண்ட் மாஸ்டர் அந்தஸ்தை தட்டிப் பரித்தார் பிரக்ஞானந்தா. 12 வயதிலேயே கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்ற பிரக்ஞானந்தாவிற்கு உலகம் முழுவதும் இந்தியர்கள் வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்தனர். உலகின் மிகப்பெரிய செஸ் வீரராக கருதப்படும் விஸ்வநாதன் ஆனந்த் அவர்கள் தனது 19-வது வயதில் தான் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை பெற்றார்.

இந்நிலையில் பிரக்ஞானந்தா மற்றும் குடும்பத்தினரை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் திருமதி.நிர்மலா சீதாராமன், 2018இல் சென்னை வந்திருந்த போது சந்தித்து அவர்களின் தேவைகளை கேட்டறிந்தார். அடுத்ததாக, உலக சாம்பியன் பட்டம் பெறுவதற்கு கடுமையான பயிற்சி தேவைப்படுவதாகவும், வெளிநாடுகளில் நடைபெறும் சர்வதேச போட்டிகளில் பங்கு பெறுவதற்கு அரசு உதவ வேண்டும் என்ற கோரிக்கை அவரிடம் வைக்கப்பட்டது. இந்த கோரிக்கைகள் குறித்து உடனடியாக மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் ராஜ்யவர்தன் ரத்தோரிடம் பேசி, உடனடியாக பிரக்ஞானந்தா மற்றும் வைஷாலி ஆகியோருக்கு தேவையான நிதி உதவியை தேசிய விளையாட்டு அபிவிருத்தி நிதியில்(National Sports Development Fund) இருந்து பெற்றுத்தந்தார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

அதன்படி 2018ஆம் ஆண்டு சிறுவன் பிரக்ஞானந்தாவுக்கு ரூபாய் 30 லட்சத்திற்கான காசோலை அப்போதைய மத்திய அமைச்சர் பொன் இராதாகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், பிரக்ஞானந்தாவை தமிழக பாஜக செய்தித்தொடர்பாளர் எஸ்.ஜி.சூர்யா நேற்று அவரது இல்லத்தில் சந்தித்துள்ளார். இதனை அடுத்து எஸ்.ஜி சூர்யா கூறுகையில், "பிரக்ஞானந்தாவின் தந்தை ரமேஷ் பாபு போலியோவால் பாதிக்கப்பட்டவர், வங்கி ஊழியர். பிரக்ஞானந்தாவின் சகோதரியைத்தான் முதலில் செஸ் பயிற்சிக்காக அனுப்பியிருக்கிறார்கள். அக்காவின் மூலம் சதுரங்கத்தை அறியத் தொடங்கியவருக்கு ஒருகட்டத்தில் இந்த விளையாட்டின் மீது கொள்ளை ஆர்வம் ஏற்பட்டது. ஆறு வயதிலேயே புனேவில் நடந்த தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் பிரக்ஞானந்தா பதக்கம் வென்றார்.

இளம் வயதிலேயே 'இன்டர்நேஷனல்ஸ் மாஸ்டர்' எனும் பெருமையையும் பெற்றார். 2018-ல் இத்தாலியில் நடந்த க்ரெடின் ஓப்பன் தொடரில் சிறப்பாக ஆடியதன் மூலம் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தையும் வென்றார். 2018 ஜீன் மாதம், பிரக்ஞானந்தா, செஸ் போட்டியில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்று சாதனை படைத்தார். 12 வயது 10 மாதங்கள் 14 நாட்களில் கிராண்ட் மாஸ்டர் என்ற பட்டத்தை பிரக்ஞானந்தா பெற்றது கூடுதல் சிறப்பு. இவர் தான் உலகத்திலேயே இரண்டாம் இளம் வயது செஸ் கிராண்ட் மாஸ்டர் என்பது குறிப்பிடத்தக்கது. 2018 ஜீன் மாதம் இத்தாலியில் நடைபெற்ற Gredine Open சர்வதேச செஸ் போட்டியின் எட்டாவது சுற்றில் வெற்றி பெற்றிருப்பதன் மூலம், கிராண்ட் மாஸ்டர் அந்தஸ்தை தட்டிப் பரித்தார். 12 வயதிலேயே கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்ற பிரக்ஞானந்தாவிற்கு உலகம் முழுவதும் இந்தியர்கள் வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்தனர். உலகின் மிகப்பெரிய செஸ் வீரராக கருதப்படும் விஸ்வநாதன் ஆனந்த் அவர்கள் தனது 19-வது வயதில் தான் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை பெற்றார்.

உலகின் நம்பர்-1 செஸ் வீரரை வீழ்த்திய சென்னை சிறுவன் பிரக்ஞானந்தா! Greeted & Congratulated young genius 11th Standard...

Posted by SG Suryah on Thursday, 24 March 2022

2018-ஆம் ஆண்டு பிரக்ஞானந்தாவின் பயிற்சியாளரும் எனது பல வருட நண்பருமான திரு.Ramesh RB அடுத்ததாக, உலக சாம்பியன் பட்டம் பெறுவதற்கு கடுமையான பயிற்சி தேவைப்படுவதாகவும், வெளிநாடுகளில் நடைபெறும் சர்வதேச போட்டிகளில் பங்கு பெறுவதற்கு அரசு உதவ வேண்டும் என்ற கோரிக்கை வைத்தார். இதை உடனடியாக அப்போது மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த திருமதி.நிர்மலா சீதாராமன் அவர்களின் கவனத்துக்கு எடுத்து சென்றோம்.

இந்த கோரிக்கைகள் குறித்து உடனடியாக அப்போதைய மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் ராஜ்யவர்தன் ரத்தோரிடம் பேசி, பிரக்ஞானந்தா மற்றும் வைஷாலி ஆகியோருக்கு தேவையான நிதி உதவியை தேசிய விளையாட்டு அபிவிருத்தி நிதியில்(National Sports Development Fund) இருந்து பெற்றுத்தந்தார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

இந்த நிலையில் தான் தற்போது 'ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ்' செஸ் தொடரின் கடைசி சுற்றில் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார். 'ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ்' ஆன்லைன் ரேபிட் செஸ் தொடரில், உலக சாம்பியன், நார்வேயின் கார்ல்சன், இந்தியாவின் பிரக்ஞானந்தா உட்பட 16 பேர் பங்கேற்கின்றனர். 8வது சுற்றில் 16 வயது பிரக்ஞானந்தா, ஐந்து முறை உலக சாம்பியன், உலகின் 'நம்பர்–1' வீரர் கார்ல்சனை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தார்.

உலக சாம்பியனை வென்ற பிரக்ஞானந்தாவுக்கு, பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட செய்தியில், "இந்தியாவின் இளம் மேதை பிரக்ஞானந்தா. ஐந்து முறை உலக சாம்பியனான கார்ல்சனை வீழ்த்தினார். அவரது வெற்றியால் நாம் அனைவரும் பெருமைப்படுகிறோம். திறமையான பிரக்ஞானந்தாவின் செஸ் உலக எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன்!" என தெரிவித்துள்ளார். இந்தியாவே பிரக்ஞானந்தாவை கொண்டாடியது.

நேற்று பிரக்ஞானந்தாவை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தோம். நண்பர் John Ravi அவர்கள் தங்க சங்கிலி அணிவித்து பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.


ஒரு திறமைவாய்ந்த சிறுவன், 11-ஆம் வகுப்பு படிக்கும் சென்னை பையன், மூத்தோருக்கான செஸ் விளையாட்டில் உலகின் நம்பர்-1 வீரரை வீழ்த்தியிருப்பது எப்பேற்பட்ட சாதனை? பிரக்ஞானந்தாவை கொண்டாடித் தீர்ப்போம்", என்று கூறியுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News