Kathir News
Begin typing your search above and press return to search.

ஆமாவா? இல்லையா? அமைச்சர் பொன்முடியை அதிர வைத்த 100 கேள்விகள்: அமலாக்கதுறை கிடுக்குபிடி!

ஆமாவா? இல்லையா? அமைச்சர் பொன்முடியை அதிர வைத்த 100 கேள்விகள்: அமலாக்கதுறை கிடுக்குபிடி!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  19 July 2023 2:44 AM GMT

தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடியின் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் திங்கள்கிழமை அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இந்த சோதனைக்குப் பிறகு அமைச்சர் பொன்முடியை அமலாக்கத்துறை அதிகாரிகள் நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணைக்குப் பிறகு அவரது வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளனர்.

அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணை நிறைவடைந்த நிலையில் அமைச்சர் பொன்முடி அங்கிருந்து புறப்பட்டு வீட்டிற்குச் சென்றார். மீண்டும் செவ்வாய் கிழமை மாலை 4 மணிக்கு விசாரணைக்கு மீண்டும் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது.

அதன்படி அமைச்சர் பொன்முடி மீண்டும் நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பொன்முடியின் மகனும் எம்.பி.யுமான கவுதம சிகாமணியும் விசாரணைக்கு ஆஜரானார்.

இரண்டு நாட்களில் மொத்தம் 13 மணி நேரம் பொன்முடியிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர். அமைச்சர் பொன்முடியிடம் விசாரணையின் போது 100 கேள்விகள் கேட்கப்பட்டதாக தெரிகிறது.

அவை ஆம்-இல்லை என பதில்அளிக்கும் வகையில் இருந்ததாக கூறப்படுகிறது. சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் 6 மணி நேரமாக விசாரணை நடந்து முடிந்த பிறகு வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

Input From: Polimer

Next Story
கதிர் தொகுப்பு
Trending News