Kathir News
Begin typing your search above and press return to search.

மக்கள் உயிருடன் விளையாடும் தி.மு.க அரசு - செலவை குறைக்க 108 ஆம்புலன்ஸ் சேவையில் கை வைத்தது!

மக்கள் உயிருடன் விளையாடும் தி.மு.க அரசு - செலவை குறைக்க 108 ஆம்புலன்ஸ் சேவையில் கை வைத்தது!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  11 Jan 2023 2:13 AM GMT

தமிழகத்தில், 108 ஆம்புலன்ஸ்கள், செலவை குறைக்க பகல், இரவு நேரங்களில் நிறுத்தப்படுவதாக தெரிய வந்துள்ளது.

108 ஆம்புலன்ஸ் மூலம் தினமும், ஆயிரக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர். தமிழகத்தில் மொத்தம், 1,353 ஆம்புலன்ஸ்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில், 950 ஆம்புலன்ஸ்கள் மட்டுமே 24 மணி நேரமும் மக்கள் சேவையில் ஈடுபடுகிறது.

செலவினங்களை குறைக்க, பணியாட்கள் பற்றாக்குறையை காரணம் காட்டி, இரவு நேரங்களில் மீதியுள்ள ஆம்புலன்ஸ்கள் சேவையை நிறுத்தி விடுவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

அதுவும், கிராமப்புற பகுதிகளில், 300 ஆம்புலன்ஸ்கள் சேவை நிறுத்தி வைக்கப்படுகிறது. இதனால், உடல்நிலை பாதிக்கப்படுவோருக்கும், விபத்தில் சிக்குவோருக்கும் உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

கிராமப்புற மக்கள் உரிய நேரத்தில் செல்ல முடியாமல், இறக்கும் சம்பவங்களும் தினமும் நடந்து வருகின்றன.

மக்கள் உயிரோடு விளையாடி, செலவுகளை குறைக்க நினைக்க கூடாது. எனவே, 108 திட்டத்தில் உள்ள ஆம்புலன்ஸ்கள் அனைத்தையும், 24 மணி நேர சேவையில் ஈடுபடுத்த வேண்டும்.

அதற்கு தேவையான பணியாட்களை நியமிக்க வேண்டும் என 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் நலச்சங்கத்தினர் கூறுகின்றனர்.

Input From: Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News