Kathir News
Begin typing your search above and press return to search.

டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ கல்லூரி பட்டமளிப்பு விழா: ஆளுநர் ஆர்.என்.ரவி 129 பேருக்கு பட்டங்களை வழங்கினார்!

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் 34வது பட்டமளிப்பு விழா இன்று காலை கிண்டியில் உள்ள பல்கலையில் நடைபெற்றது.

டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ கல்லூரி பட்டமளிப்பு விழா: ஆளுநர் ஆர்.என்.ரவி 129 பேருக்கு பட்டங்களை வழங்கினார்!

ThangaveluBy : Thangavelu

  |  20 Dec 2021 11:42 AM GMT

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் 34வது பட்டமளிப்பு விழா இன்று காலை கிண்டியில் உள்ள பல்கலையில் நடைபெற்றது.


இந்த விழாவில் தமிழக ஆளுநரும் பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி தலைமை ஏற்று மருத்துவ மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். இதில் மொத்தமாக 12,814 பேருக்கு பட்டங்கள் வழங்கப்படுகின்றது.


இதில் 129 பேருக்கு விழா மேடையிலேயே ஆளுநர் ஆர்.என்.ரவி. பட்டங்களை வழங்கினார். மீதமுள்ள நபர்களுக்கு கல்லூரி சார்பாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் துணைவேந்தர் சுதா சேஷய்யன் மற்றும் அமைச்சர், சுகாதாரத்துறை அதிகாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Source: Maalaimalar

Image Courtesy: Facebook



Next Story
கதிர் தொகுப்பு
Trending News