புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு மத்திய அரசு ரூ.1340 கோடி ஒதுக்கீடு!
By : Kathir Webdesk
மத்திய அரசின் நிறுவனமான ஜிப்மருக்கு கடந்த ஆண்டு ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. இந்த ஆண்டு ஒதுக்கீடு ரூ.1340 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல்வாழ்வு இணையமைச்சர் பாரதி பிரவீன் பவார் தெரிவித்தார்.
புதுச்சேரி அரசு சுகாதாரத் துறையைப் பொறுத்து சிறப்பாகச் செயல்படுகின்றது. பேறு காலத்தில் தாய்மார்கள் இறப்பு விகிதம் மற்றும் குழந்தைகள் இறப்பு விகிதம் ஆகியவற்றை புதுச்சேரி அரசு வெகுவாகக் குறைத்துள்ளது. பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய திட்டத்தின் கீழ் புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 29,000 நோயாளிகள் இலவசமாக உயர் சிகிச்சை பெற்றுள்ளனர்.
இதற்கான நிதி ஒதுக்கீடு ரூ. 5 கோடியாகும். தேசிய சுகாதார இயக்கத்தின்கீழ் புதுச்சேரிக்கு ஆரம்ப நிலை மற்றும் இடை நிலை சுகாதார சேவை மேம்பாட்டுக்காக ரூ.70 கோடியை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. அதேபோல் பிரதம மந்திரி ஆயுஷ்மான் பாரத் உள்கட்டமைப்பு மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் புதுச்சேரிக்கு ரூ.150 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.
Input From: PIB