Kathir News
Begin typing your search above and press return to search.

திருக்கோவிலூர்: அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு பூஜை!

திருக்கோவிலூரில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு கிழக்கு வீதி ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமி திருக்கோயிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் ஆஞ்சநேய சுவாமிக்கு விஷேச அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தது.

திருக்கோவிலூர்: அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு பூஜை!

ThangaveluBy : Thangavelu

  |  3 Jan 2022 1:51 PM GMT

திருக்கோவிலூரில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு கிழக்கு வீதி ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமி திருக்கோயிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் ஆஞ்சநேய சுவாமிக்கு விஷேச அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தது.

நேற்று (ஜனவரி 2) நாடு முழுவதும் அனுமன் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதனால் காணும் இடமெல்லாம் ஆஞ்சநேயர் சுவாமி கோயிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நாமக்கல்லில் உள்ள ஆஞ்சநேயர் சுவாமி திருக்கோயிலில் கொரோனா தொற்று கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். அதே போன்று பிற மாவட்டங்களில் உள்ள ஆஞ்சநேயர் சுவாமி திருக்கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. வடை மற்றும் துளசிகளால் மாலைகள் அணிவிக்கப்பட்டது. அன்னதானங்கள், பிரசாதங்கள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

அதே போன்று திருக்கோயிலூரில் கிழக்கு வீதியில் உள்ள ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமி திருக்கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நேற்று காலை 11 மணிக்கு விஷேஷ திருமஞ்சனமும், மாலையில் வெண்ணை காப்பும், லட்சதீபலங்காரம் மற்றும் மகாதீபாரதனையும் நடைபெற்றது. இதில் திருக்கோவிலூர் 26வது பட்டம் ஸ்ரீமத் எம்.பெருமானார் ஜீயர் சுவாமிகள், ஸ்ரீ உ.வே.தேகளிச ராமாநுஜாசார்ய சுவாமிகள் அவர்களின் ஹனுமத் பிராபாவம் உபன்யாசம் நடைபெற்றது. ஜீயர் பட்டம் பெற்ற பிறகு இதுவே முதல் உபன்யாசம் ஆகும். இதில் ஸ்ரீ த்ரிவிக்ரம திருக்கோயில் சார்பாக ஸ்ரீ பக்த கோலாகல ஸ்வாமிகள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. விழா ஏற்பாடுகளை ஸத் ஸங்கத்தினர் மேற்கொண்டனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News