Kathir News
Begin typing your search above and press return to search.

இந்து பள்ளி மாணவிகள் இஸ்லாமிய பள்ளிக்கு இடமாற்றம்! இந்து முன்னணி போராட்டம்!

இந்து பள்ளி மாணவிகள் இஸ்லாமிய பள்ளிக்கு இடமாற்றம்! இந்து முன்னணி போராட்டம்!

ThangaveluBy : Thangavelu

  |  10 Jan 2022 2:58 AM GMT

நெல்லையில் கொரோனா பரிசோதனை மையம் அமைப்பதற்காக இந்து பள்ளி மாணவிகளை இஸ்லாமிய பள்ளிக்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்னர் உள்ள காந்திமதி பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கொரோனா பரிசோதனை மையம் துவக்கப்பட்டது. கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் வந்து செல்வதால் இந்து பள்ளி மாணவிகளை அருகாமையில் உள்ள ரஹ்மானியா இஸ்லாமிய மேல்நிலைப்பள்ளிக்கு இடமாற்றம் செய்வதற்கு முடிவு செய்யப்பட்டது.

இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்ட இந்து முன்னணி மாநிலச் செயலாளர் குற்றாலநாதன் மற்றும் தொண்டர்கள் என்று பலர் எதிர்ப்பு தெரிவித்து பள்ளி முன்னர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆட்சியர் முன்னர் அமர்ந்து கோஷங்களை எழுப்பினர். அதாவது இந்து சமய அறநிலையத்துறை நடத்தும் காந்திமதி பள்ளியில் உள்ள மாணவியரை இஸ்லாமிய பள்ளிக்கு மாற்றக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் வேறு வழியின்றி மாணவிகள் மாற்றம் நிறுத்தி வைக்கப்பட்டது. மாணவிகள் தொடர்ந்து அப்பள்ளிக்கு வந்து செல்வதற்கு மாற்று ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் செய்து கொடுக்க முன்வந்துள்ளது.

Source, Image Courtesy: Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News