135 MT ஆக்ஸிஜன்... பத்து மாவட்டம்... ஸ்டெர்லைட்டின் கொரோனா சேவை!
By : Parthasarathy
கொரோனா காலத்தில் தமிழ்நாட்டில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை அதிகமாக இருந்த நிலையில் முன்னாள் முதலமைச்சர் திரு.எடப்பாடி பழனிசாமி அவர்கள் தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்திக்காக மட்டும் இயங்கலாம் என்று தெரிவித்தார். அதனை தொடர்ந்து அரசு அதிகாரிகளின் கண்காணிப்பில் இன்று வரை ஸ்டெர்லைட் ஆலை கொரோனா நோயாளிகளுக்கு தேவையான ஆக்ஸிஜனை உற்பத்தி செய்து வருகிறது.
தற்போது வரை இந்த கொரோனா காலத்தில் ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 135 மெட்ரிக் டன் திரவ ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யப்பட்டு பத்து மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கபட்டது. ஸ்டெர்லைட்டில் ஆக்ஸிஜன் உற்பத்தி தொடங்கும் பொழுது ஒரு நாளைக்கு 10 டன் அளவுக்கு ஆக்ஸிஜன் மட்டுமே உற்பத்தி செய்ய முடிந்தது.
ஆனால் தற்போது அங்கு ஒரு நாளைக்கு 29 டன் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் வரை ஒரு நாளைக்கு 28.12 டன் அளவுக்கான ஆக்ஸிஜன் தூத்துக்குடி, நாமக்கல், சிவகங்கை, தேனீ ஆகிய ஊர்கலில் தவிக்கும் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டது.