மத்திய அரசின் சாலைத் திட்டங்களை அமல்படுத்த தி.மு.க அரசு ஒத்துழைக்கவில்லை! மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பரபரப்பு குற்றச்சாட்டுகள்!
By : Dhivakar
"தமிழ்நாட்டில் திட்டங்களை அமல்படுத்த பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறோம்" என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
"பிசினஸ் லைன்" நாளேடு நடத்திய இணையதள நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பங்கேற்று உரையாற்றினார். அப்பொழுது தமிழகம் பற்றி அவர் கூறுகையில் "தமிழ்நாட்டில் எங்கள் திட்டங்களை அமல்படுத்த நிறைய பிரச்சினைகளை சந்தித்து வருகிறோம் அதனால் அத்திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினிடம் இப்பிரச்சினைகள் குறித்து முறையிட்டதாகவும் கூறியுள்ளார்.
சாலைகளை கட்டமைப்பதற்கான கட்டுமான பொருட்களை திரட்டுவதில் சிரமம் மற்றும் கட்டுமானம் நடத்துவதற்கு தமிழக அரசிடமிருந்து அனுமதி பெறுவதும் மிகவும் சிரமமாகவுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
"தமிழக அரசு அதிகாரிகள் மட்டத்தில் இருந்து அனுமதி வழங்க தயக்கம் ஏற்பட்டுள்ளதால், திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினிடமும், தலைமைச் செயலாளரரிடமும் இதுகுறித்து பேசியாகிவிட்டது, தமிழக அரசு மத்திய அரசுக்கு ஒத்துழைத்தால் ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை அமல்படுத்த தயாராகவுள்ளோம்" என்றும் மத்திய அமைச்சர் கூறியுள்ளார்.
"கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் நிறையத் திட்டங்கள் அமலாகி வருகிறுது. கேரளாவில் நாங்கள் சாலை அமைப்பதற்காக, நிலம் கையகப்படுத்துதலில் நிறைய பிரச்சனைகளை சந்தித்தோம். ஆனால் கேரள முதலமைச்சரின் நடவடிக்கைகள் மற்றும் அவரது அதிரடி முடிவுகள் எங்களுக்கு உதவிகரமாக அமைந்துள்ளதால் நாங்கள் கேரளாவிற்கு நிறைய திட்டங்களை கொண்டு சென்றுள்ளோம்" என்றும் தன் உரையில் குறிப்பிட்டுள்ளார்.
"நிதி பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமில்லை நாங்கள் ஆயிரம் கோடி மதிப்பிலான சாலை திட்டங்களை தமிழ்நாட்டிற்குத் தர தயாராகவுள்ளோம்" என்று உறுதியாக கூறியுள்ளார்.
"இரண்டாவது முறை இம்மாதிரியான கோரிக்கையை மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் விடுத்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து, மத்திய அரசின் சாலை திட்டங்களை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தமிழக பா.ஜ.க தலைவர் திரு அண்ணாமலை அவர்கள் கூறியுள்ளார்.