மௌன விரதமிருக்கும் தலைவர்களுக்கு மத்தியில், மாணவி இறப்புக்கு எதிர்ப்புக் குரல் கொடுத்த விஜயகாந்த்!
By : Dhivakar
தஞ்சை மாணவி இறப்புக் குறித்து தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தஞ்சையில் தூய இருதய மேல்நிலைப்பள்ளி என்ற கிறிஸ்தவ பள்ளியில் பயின்று வந்த இந்து மாணவியை, அப்பள்ளி நிர்வாகம் கட்டாய மதமாற்றத்திற்க்கு வற்புறுத்தியதால், அம் மாணவி தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் நாடு முழுவதும் பேசுபபொருளாகியுள்ளது. "உயிரிழந்த மாணவிக்கு நீதி வேண்டும், குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்" என்றும் பலரும் தங்களது கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
தமிழக அரசியல் தலைவர்களில், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, இந்து முன்னணி அமைப்பு, தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் இந்து மக்கள் கட்சி தலைவர்கள் "இறந்த தஞ்சை மாணவிக்கு நீதி வேண்டும், குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் " என்று குரல் எழுப்பி வருகின்றனர்.
இவர்களது வரிசையில் தற்போது தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் அவர்கள் தஞ்சை மாணவி இறப்புக் குறித்து தனது குரலை அறிக்கையாக பதிவு செய்துள்ளார் அவர் முக்கியமாக கூறியதாவது : மாணவி தற்கொலை விவகாரத்தில் உண்மையை கண்டறிந்து குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும்.சமீபத்தில் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் அதிகரிப்பது மனவேதனை அளிக்கிறது.
மாணவ செல்வங்களே, தற்கொலை எண்ணத்தை கைவிட்டு,பிரச்சனைகளை துணிந்து எதிர்கொள்ள கற்று கொள்ளுங்கள்.
தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சிகளும், ஊடகங்களும் தஞ்சை மாணவி இறப்பு குறித்து மௌன விரதம் கடைபிடிக்கும் நிலையில், திரு.விஜயகாந்த் அவர்களது எதிர்ப்புக்குரல் இவ் விவகாரத்திற்கு வலு சேர்த்துள்ளது.