Kathir News
Begin typing your search above and press return to search.

கோவில் இடத்தில் தி.மு.க பிரமுகரின் உதவியுடன் கட்டப்படும் கழிப்பிட கட்டிடம்!

கோவில் இடத்தில் தி.மு.க பிரமுகரின் உதவியுடன் கட்டப்படும் கழிப்பிட கட்டிடம்!
X

DhivakarBy : Dhivakar

  |  27 Jan 2022 9:12 PM GMT

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், இந்து கோவில் இடத்தில், கழிப்பிடம் கட்ட முயற்சி நடப்பதாக புகார் எழுந்துள்ளதால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தமிழகத்தில் பல ஆண்டுகளாக இந்து கோயில் நிலங்கள் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து வருவது அனைவரும் அறிந்ததே. அதைத் தொடர்ந்து, இந்து மத அடையாளங்களை அவமதிக்கும் சம்பவங்களும் நடந்தேறி தான் வருகிறது. இந்த வரிசையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், திருநாவலூர் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு மனோன்மணி சமேத பக்தஜனேஸ்வரர் ஆலயம். இவ்வாலயம் அப்பகுதியில் பிரசித்தி பெற்றதாகும். விசேஷ நாட்களில் அப்போது இந்துக்கள் அவ்வாலயத்திற்கு வந்து வழிபடுவது வழக்கமாக இருந்து வருகையில், அவ்வாலய இடத்தின் ஒருபகுதியில், தி.மு.க'வைச் சேர்ந்த ஒன்றிய தலைவர் ஒருவரது உதவியுடன், கழிப்பிடம் கட்ட முயற்சி நடப்பதாக புகார் எழுந்துள்ளது. இப்புகாரை அறிந்த இந்து முன்னணி அமைப்பு இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளது.

Hindu Munnani

Next Story
கதிர் தொகுப்பு
Trending News