Kathir News
Begin typing your search above and press return to search.

மிஷனரிகள் சதியால் ஒருமுறை கொலை செய்யப்பட்ட தஞ்சை பள்ளி மாணவியை மீண்டும் தி.மு.க. கொல்ல நினைப்பது சரியா: முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ABVP பரபரப்பு கடிதம்!

அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் தேசிய பொதுச் செயலாளர் நிதி. திரிபாதி பள்ளி மாணவி லாவண்யா மரணம் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:

மிஷனரிகள் சதியால் ஒருமுறை கொலை செய்யப்பட்ட தஞ்சை  பள்ளி மாணவியை   மீண்டும் தி.மு.க. கொல்ல நினைப்பது சரியா: முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ABVP பரபரப்பு கடிதம்!
X

ThangaveluBy : Thangavelu

  |  10 Feb 2022 7:53 AM GMT

அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் தேசிய பொதுச் செயலாளர் நிதி. திரிபாதி, தஞ்சை பள்ளி மாணவி மரணம் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:

தலைப்பு: லாவண்யாவின் இரண்டாவது கொலை

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே, உங்களுக்கு எழுதிய இந்தக் கடிதம் குற்றவாளிக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் ஆவேசத்தின் மை கொண்டு எழுதுகிறேன். உங்கள் தலைமையிலான தமிழக அரசின் அலட்சியப்போக்கு மற்றும் உணர்வின்மையை வைத்து எழுதுகிறேன்.

உங்கள் ஆட்சியில் மிகவும் தகுதியான பெண் குழந்தை மதமாற்ற சக்திகளால் சித்திரவதை செய்யப்பட்டு இந்து மதத்தை கைவிட நிர்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இது முறையற்ற செயலாகும். மதமாற்ற விளையாட்டில் தஞ்சை தூய இருதய மேல்நிலைப் பள்ளியின் மிஷனரி ஆசிரியர்கள் மற்றும் அதன் நிர்வாகிகளின் பங்கு தெளிவான ஆதாரங்களுடன் வெளிவந்துள்ளது.


மறைந்த எனது சகோதரி லாவண்யா மரணப்படுக்கையில் தனக்கு நேர்ந்த கொடுமைகளை விவரித்துள்ளார். லாவண்யா கொலைக்கு காரணமான குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்று இந்தியா முழுவதும் குரல்கள் எழுந்து வருகின்றன. ஆனால் உங்கள் அரசு குற்றவாளிகளுக்குத் துணை நிற்கிறது. கடந்த வியாழன் அன்று லாவண்யாவின் வீட்டிற்கு சென்று அவரது பெற்றோர் மற்றும் தம்பிகளை சந்தித்தேன். அவர்களுக்கு என்ன நடக்கிறது என்பதை நினைத்துப் பார்க்க முடியாத வேதனை. சிறு குழந்தைகளை காவல் நிலையத்தில் உட்கார வைத்து, விரும்பிய வாக்குமூலத்தை கொடுக்குமாறு வற்புறுத்துவது உங்கள் அரசு விதியின் ஒரு அங்கமா! எதற்காக, யாருடைய உத்தரவின் பேரில் தமிழக காவல்துறை இந்த வேலையைச் செய்கிறது.

லாவண்யாவின் குடும்பத்தை சித்திரவதை செய்வதன் மூலம் யாருடைய பலனை உறுதிப்படுத்த விரும்புகிறீர்கள் என்பதையும் நீங்கள் சொல்ல வேண்டும்.! திரு.முருகானந்தம் (லாவண்யாவின் தந்தை) கடந்த 25 ஆண்டுகளாக உங்கள் கட்சியின் தீவிர உறுப்பினராக இருந்து வந்துள்ளார் என்பதையும் அறிகிறோம். உங்கள் கட்சித் தொண்டரின் குடும்பத்திற்கே இந்த நிலையா..!! உங்கள் கட்சியில் இருந்து ஒருவர் கூட அவரின் வீட்டு வாசல் வரைகூட செல்லவே இல்லை.


மேலும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை சவாலுக்கு உட்படுத்துவது உங்கள் நோக்கத்தை முற்றிலும் தெளிவாக்கியுள்ளது. அரசியல் காரணங்களால் லாவண்யாவுக்கு நீதி வழங்க உங்கள் அரசு விரும்பவில்லை. ஒருமுறை மிஷனரிகளின் சதியால் லாவண்யா கொல்லப்பட்ட நிலையில், இப்போது உங்கள் அரசும், கட்சியும் லாவண்யாவை மீண்டும் கொல்ல நினைக்கின்றன.

மத்திய அரசின் நிறுவனங்கள் மீதான உங்கள் அணுகுமுறையும் சந்தேகத்திற்குரியது. இந்த விவகாரத்தில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் மற்றும் தேசிய மகளிர் ஆணையத்துடன் உங்கள் அரசு ஒத்துழைக்கவே இல்லை. தேசத்திற்கு ஈடு இணையற்ற சேவையாற்றிய தனித்திறமைசாலிகளின் தாயாக தமிழகம் திகழ்கிறது. ஆன்மீக பூமியான தமிழகத்தில் உஞ்கள் தலைமையில் நடக்கும் ஆட்சியானது லாவண்யா போன்றோர் உள்ள கட்டணங்களை வளர்ந்து வரும் திறமைசாலிகளை மதமாற்றத்தை நடத்தி வரும் மிஷனரி சக்திகளின் கைகளில் நிறுத்தி அனுமதிக்கிறது.

மதமாற்ற நோக்கத்துடன் செயல்படும் இந்த மிஷனரி சக்திகள் உங்களது முழுப் பாதுகாப்பைப் பெறுவது தெளிவாகத் தெரிகிறது. மீண்டும்.. மீண்டும் லாவண்யா போன்ற திறமையாளர்கள், மிஷனரிகளால் துன்புறுத்தப்படுகிறார். ஒரு லாவண்யாவுக்கு நீதி கிடைக்காவிட்டால், இனி வரும் காலங்களில் சமூகம் எத்தனையோ லாவண்யாகளின் கொலைகளை ஏற்றுக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படும். இந்த மதமாற்ற தொல்லைகளை நிறுத்துவதற்குப் பதிலாக, இந்தப் பிரச்சினையை தேவையில்லாமல் அரசியலாக்கி கட்சி அரசியலுக்கு உங்கள் ஆட்சி அதிகாரங்கள் உட்படுத்துவது மிகவும் வருந்தக்தக்கது. இந்த விஷயத்தில் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் வரலாறு காணாத கோபம் உள்ளது.

நாடு முழுவதும் மாணவர்கள் லாவண்யாவுக்காக தெருவில் இறங்கி போராடி வருகின்றனர். லாவண்யாவின் குடும்பத் துன்புறுத்தல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். குற்றவாளிகளான மிஷனரி படைகள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மாணவர்களின் கோரிக்கையாக உள்ளது.

ஐயா லாவண்யாவுக்கு சீக்கிரம் நீதி கிடைக்கட்டும். இல்லாவிட்டால் நீதி கிடைக்கும் வரை மாணவ, மாணவிகளின் கோபம் குறையாது. இவ்வாறு நிதி திரிபாதி எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Image Courtesy: Maalaimalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News