Kathir News
Begin typing your search above and press return to search.

பூணூல் அறுக்கும் போராட்டம் அறிவித்த 'தடா ரஹீமை' கைது செய்ய வேண்டும் என கமிஷனர் அலுவலகத்தில் புகார்!

பூணூல் அறுக்கும் போராட்டம் அறிவித்த தடா ரஹீமை கைது செய்ய வேண்டும் என கமிஷனர் அலுவலகத்தில் புகார்!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  23 Feb 2022 8:40 PM IST

"பூணூல் அறுக்கும் போராட்டம் நடத்தப்படும்" என்று முகப்புத்தகத்தில் பதிவிட்ட தடா ரஹீமை கைது செய்ய வேண்டும் என்று இந்து முன்னணி மனு அளித்துள்ளது.


கர்நாடக ஹிஜாப் சர்ச்சை நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இது குறித்து பலரும் தங்களின் கருத்துக்களை கூறீ வருகின்றனர்.

ஆனால் தமிழகத்திலோ ஹிஜாப் சர்ச்சையின் முழு வடிவத்தை தமிழக மக்களிடம் ஊடகங்கள் சென்று சேர்க்காததால், இங்கே ஹிஜாப் சர்ச்சை குறித்து பலரும் முற்றிலும் சம்பந்தமே இல்லாத கருத்துக்களை கூறி சமூக நல்லிணக்கத்தை கெடுத்து வருகின்றனர்.


அதாவது, கர்நாடகத்தில் கல்வி நிலையங்களில் இஸ்லாமிய மாணவிகளை ஹிஜாப் அணிய தடை விதித்தால், பிராமணர்கள் மட்டும் ஏன் பூணூல் அணிந்து வருகின்றனர் என்பதே அவர்கள் கூறும் முட்டாள்தனமான கருத்து.

இக் கருத்துக்கு வலு சேர்க்கும் விதமாக, இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில தலைவர் தடா ரஹீம் தன் முகநூல் பக்கத்தில், பூணூல் அறுக்கும் போராட்டம் நடத்துவது தொடர்பாக கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு பல எதிர்ப்புகளும் கிளம்பியது.

இந்நிலையில் இந்து முன்னணி அமைப்பு "தடா ரஹீமை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்" என்று சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளது.

Hindu Munnani

Next Story
கதிர் தொகுப்பு
Trending News